புடவை அணிந்து ஃபுட் பால்; மேற்கு வங்க பெண் எம்.பி அசத்தல்!

Mp Play Foot Ball
Mp Play Foot Ball
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மேற்கு வங்கம், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி-யான மஹூவா மொய்தரா கூலிங் கிளாஸ் அணிந்து புடவை கட்டி ஃபுட் பால் விளையாடியது வைரலாகியுள்ளது.

மேற்கு வங்கம், கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மஹூவா மொய்தரா. திரிணாமூல கட்சியைச் சேடர்ந்த இவரது அதிரடி பேச்சுக்களுக்கும் கருத்துக்களுக்கும் ஏற்கனவே மிகப் பிரபலம். இந்நிலையில், மஹூவா மொய்த்ரா தனது சொந்த கிருஷ்ணாநகர் தொகுதியில் நடைபெற்ற கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அத்துடன் கால்பந்து மைதானத்தில் களமிறங்கி சிறிது நேரம் விளையாடவும் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை மஹூவா மொய்த்ரா தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் ஹைலைட்டாக கூலிங் கிளாஸும் புடவையும் அணிந்து இவர் கால்பந்து விளையாடியது வைரலாகியுள்ளது..

logo
Kalki Online
kalkionline.com