தென்கொரியாவில் கேங்கனியூங் பகுதியில் பரவிய காட்டுத்தீ!

தென்கொரியாவில் கேங்கனியூங் பகுதியில் பரவிய காட்டுத்தீ!
Published on

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

தென் கொரியாவின் கேங்கனியூங் பகுதியில் உள்ள வனத்தில் திடீரென தீப்பற்றியது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த மற்ற வனப்பகுதிகளுக்கும் காட்டுத்தீ மளமளவென பரவியது. பலத்த காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக இந்த காட்டுத்தீ வேகமாக பரவியது.

இதையடுத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த தீ விபத்தில் 420 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களும் 10க்கும் மேற்பட்ட கட்டடங்களும் சேதமடைந்த நிலையில், 3 பேர் காயமடைந்தனர்.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதில் அங்கு காட்டையொட்டி மலைக்கு மேல் கட்டப்பட்டிருந்த வீடுகளில் தீப்பற்றியது. இந்த தீயானது சுற்றியுள்ள அத்தனை வீடுகளுக்கும் பரவி கொழுந்துவிட்ட எரிய தொடங்கியது.

நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிட்டத்தட்ட 6 ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது.ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களை பயன்படுத்தியும் காட்டுதீயை அணைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தீயை அணைப்பது பெரும் சவாலாக அமையும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com