தவெக தலைவர் விஜய் எனக்கு என்ன மாமனா? மச்சானா?... நாங்கள் ஆதரவு தர? - டிடிவி தினகரன் காட்டம்..!

TTV Dhinakaran press meet
TTV Dhinakaran press meet image source:Dailythanthi
Updated on

தமிழ்நாட்டு முதல்வராக தவெக கட்சியின் தலைவர் விஜய் பெரும்பான்மை இடங்கள் வேண்டி பல சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் என்டிஏ கூட்டணியில் இருக்கும் அமமுக கட்சியின் எம்எல்ஏ காமராஜ் தங்களுக்கு ஆதரவாக கடிதம் எழுதித் தந்ததாக வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எம்எல்ஏ அளித்ததாக கூறப்படும் ஆதரவு கடிதம் உண்மையல்ல என ஆளுநரை சந்தித்து நேற்று புகார் அளித்திருந்தார் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

காமராஜ் கையெழுத்திட்டதாக வெளிவந்த வீடியோ மற்றும் இதன் பின்னணி குறித்து செய்தியாளரிடம் டிடிவி தினகரன் பேசியதாவது:

"தவெகவுக்கு ஆதரவு கொடுத்திருந்தால் அவர் அளித்ததாக சொல்லப்படும் ஆதரவு கடிதத்தின் அசல் கடிதம் எங்கே? காமராஜ் கையெழுத்து போடும் வீடியோவை எடுத்தது யார்? எங்கே எடுத்தார்கள்?

காமராஜ் கையில் இருக்கும் பச்சை கயிறு கூட வீடியோவில் இருப்பதாக கூறுகிறீர்கள் . புகைப்படத்தை பார்த்துவிட்டு ஏஐ வீடியோவை உருவாக்கி இருக்கலாம் தவெகவினர். வீடியோ நள்ளிரவில் தான் வந்திருக்கிறது அது குறித்து இனி தான் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் .

காமராஜர் கையெழுத்திட்டதாக வெளியான வீடியோ மோசடி வீடியோ என ஆளுநரிடம் கூறிவிட்டோம் .ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மோசடி செய்கிறது தவெக. குறிப்பாக தவெக தலைவர் விஜய் நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்றவர் காமராஜ்.

திமிரிலும் வன்மத்துடனும் தவெகவினர் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.காமராஜ் கையெழுத்திட்டது போன்ற வீடியோவை வெளியிட்டது யார்? எங்கள் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கின்றது. எனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர் .

காமராஜ் கையெழுத்து இட்டதாக தவெக கூறும் அசல் கடிதம் எங்கே? எனது கட்சி எம்எல்ஏ ஆதரவளித்து இருந்தால் அவரையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து அழைத்துச் செல்லாதது ஏன்? தவெகவினர் என்னை மிரட்டவும் பயமுறுத்தவும் பார்க்கின்றனர். 10 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக காமராஜ் உள்ளார். அவர் எப்படி தவெகவுக்கு ஆதரவு தருவார்?

ஆட்சி அதிகாரம் வருவதற்கு முன்னரே இத்தனை திமிரா, அகம்பாவமாக செயல்படுகிறார் விஜய்.. விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு பேரழிவு தான் என கடுமையாக பேசினார்.

விஜய் எனக்கு என்ன மாமனா மச்சானா? நாங்கள் ஏன் ஆதரவளிக்க வேண்டும் ? அவர் பெரிய ஹீரோவாக இருந்தால் எனக்கு என்ன?ஆனால் நாங்கள் 30 வருடமாக எத்தனையோ தலைவர்களை நெருக்கடிகளை சந்தித்துள்ளோம்.மெஜாரிட்டி வேண்டும் என்றால் கேட்டு வாங்க வேண்டும். மெஜாரிட்டிக்காக தவெக தில்லுமுல்லு செய்வது ஏன்? விஜய் ஒரு தேவதூதர் .அவருக்கு சாமானியன் ஆன நான் எப்படி அறிவுரை கூற முடியும்? மக்களுக்கு தேவையான உரிய பதில் அளிக்க வேண்டும் "

சர்ச்சைக்கு உள்ளான எம்எல்ஏ காமராஜர் அருகில் இருக்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தவெக மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

மேலும் உடனிருந்த எம்எல்ஏ காமராஜ் "நான் இருந்த வீடியோ உண்மை அல்ல" என தன்னிலை விளக்கம் தந்தபின் "பெரும்பான்மை இல்லாத விஜய் ஆட்சி அமைக்க முயற்சிப்பது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
போலீஸ் வளையத்தில் சென்னை - தவெக தொண்டர்களின் அடுத்த மூவ் என்ன?
TTV Dhinakaran press meet
logo
Kalki Online
kalkionline.com