முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் 33 ஆண்டுகள் அரசியல் பணிக்குப் பின் ஓய்வு பெற்றார்!

Former Indian Prime Minister Manmohan Singh retired after 33 years of political career!
Former Indian Prime Minister Manmohan Singh retired after 33 years of political career!https://www.tamilspark.com

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங், 1991ம் ஆண்டு அக்டோபரில், முதன் முறையாக ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் கடந்த 33 ஆண்டுகளாக ராஜ்யசபா எம்பியாக மட்டுமே மன்மோகன் சிங் பதவி வகித்து வந்துள்ளார். மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் தற்போது நிறைவடைந்துள்ளது. மன்மோகன் சிங் 1991 - 1996ல் இந்தியாவின் நிதி அமைச்சராகவும், 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டு காலம் இந்திய நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தார். தற்போது 91 வயதாகும் நிலையில் அவருக்கு மீண்டும் ராஜ்ய சபா எம்பி பதவி தரப்படவில்லை. மேலும், அந்த இடத்துக்கு தற்போது மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த மன்மோகன் சிங்?

மன்மோகன் சிங், செப்டம்பர் மாதம் 26ம் தேதி, 1932ல் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 1948ல் தன்னுடைய மெட்ரிக்குலேஷன் தேர்வுகளை முடித்தார். இவருக்கு இயல்பாகவே படிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. இதன் மூலம் மன்மோகன் சிங் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார். அங்கு அவர் 1957ல் பொருளாதாரத்தில் முதல்நிலை ஹானர்ஸ் பட்டத்தைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1962ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நஃப்ஃபீல்ட் கல்லூரியில் பொருளாதாரத்தில் டி.ஃபில். பட்டத்தையும் பெற்றார்.

அரசியல் பயணம்: 1971ம் ஆண்டு டாக்டர் மன்மோகன் சிங் தனது இந்திய அரசியல் பயணத்தைத் துவங்கினார். முதன்முதலில் வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மிகக் குறுகிய காலத்திலேயே, 1972ம் ஆண்டு அவர் மத்திய நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பணியில் அமர்த்தப்பட்டார். மன்மோகன் சிங் மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என்று பல்வேறு முக்கியப் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

தன்னுடைய அர்ப்பணிப்பு மிக்க அரசியல் வாழ்க்கையில் டாக்டர் மன்மோகன் சிங், நாடாளுமன்றத்தின் ராஜ்யசபா எம்பியாக 1991ல் இருந்து பணியாற்றினார். அங்கு அவர் 1998 முதல் 2004 வரையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2004ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், மே மாதம் 22ம் தேதி டாக்டர் மன்மோகன் சிங் இந்திய நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். அதன் பின்னர் 2009ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி இரண்டாவது முறையாக அவர் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.

இதையும் படியுங்கள்:
லண்டன் நாடாளுமன்ற தேர்தல்: ஆளும்கட்சி படுமோசமான தோல்வியை சந்திக்குமா? சர்வே கூறுவது என்ன?
Former Indian Prime Minister Manmohan Singh retired after 33 years of political career!

உலக அளவில் அங்கீகாரம்: சுதந்திர இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வரலாற்றில் மிக முக்கியமான பல யோசனைகளையும் திட்டங்களையும் இவர் வகுத்துள்ளார். அந்த வகையில் 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையில் மத்திய நிதியமைச்சர் பதவியில் டாக்டர் மன்மோகன் சிங் இருந்துள்ளார். மேலும், அந்த சமயத்தில் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள், இன்றும் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன.

விருதுகள்: டாக்டர் மன்மோகன் சிங் தன்னுடைய தன்னலமற்ற பொதுசேவைக்காக பல்வேறு விருதுகளையும், பெருமைகளையும் பெற்றுள்ளார். இதில் முக்கியமானது இந்தியக் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் (1987) ஆகும். மேலும், இந்திய அறிவியல் மாநாட்டில் ஜவஹர்லால் நேரு நூற்றாண்டு பிறந்த நாள் விருது (1995), சிறந்த நிதியமைச்சராக இருந்ததற்காகக் கிடைத்த ஆசிய செலாவணி விருது, (1993 மற்றும் 1994), சிறந்த நிதியமைச்சருக்கான யூரோ செலாவணி விருது (1993), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு (1956), கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் மிகச்சிறந்த மாணவராக இருந்ததற்காக ரைட்ஸ் பரிசு (1955) போன்ற பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com