போஸ்கோ சட்டத்தின் கீழ் கைதாகும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர்!

B. S. Yediyurappa
B. S. Yediyurappa
Published on

- மதுவந்தி

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான பி.எஸ்.எடியூரப்பாவை போஸ்கோ சட்டத்தின் கீழ் ஜாமீன் இல்லாத வகுப்பில் கைது செய்ய கர்நாடக POCSO நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

டெல்லியில் இருப்பதால் உடனே வரமுடியாது எனவும் வரும் பதினேழாம் தேதி ஆஜர் ஆவதாகவும் எடியூரப்பா பதிலளித்திருந்தார். ஆனால் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரை உடனே கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, அவரை கைது செய்வதற்குச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.எம். ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிப்ரவரி இரண்டாம் தேதி பதினேழு வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் அவரது வீட்டிற்கு உதவி கேட்டுச் சென்றபொழுது, அச்சிறுமியின் கையை பிடித்து இழுத்துச் சென்று வீட்டின் ஒரு அறையில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக அச்சிறுமியின் தாயார் மார்ச் பதினாலாம் தேதி பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதை எதிர்த்துக் கேட்க முற்பட்டபொழுது பணத்தைக் கொடுத்து விஷயத்தை மறைக்கப் பார்த்துள்ளார் எடியூரப்பா என சிறுமியின் தாயார் புகாரில் கூறியிருக்கிறார். இந்த புகாரின் பேரில் எடியூரப்பாவின் மேல் முதல் தகவல் அறிக்கை, போஸ்கோ சட்டத்தின் எட்டாவது பிரிவின் கீழும் இந்தியத் தண்டனைச் சட்ட தொகுப்பின் 354(A) பிரிவின் படியும் போலீசார் வழக்கு பதிவிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
குவைத் தீ விபத்து! இறந்தவர்களின் உடல்கள் இன்று சொந்த ஊர் செல்லும் நிலையில் தொழிலதிபர்கள் நிதி உதவி!
B. S. Yediyurappa

கைதாவதற்கு வாய்ப்பிருக்கு என்பதினால் எடியூரப்பா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதற்குள் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு மேல் முறையீடு மனு ஒன்றை அளித்துள்ளார் எடியூரப்ப. அதில் தன் மேல் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தவறானது எனவும் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குற்றவியல் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்தும் அவரது தாயிடமிருந்தும் நூற்று அறுபதுக்கும் மேற்பட்ட வாக்குமூலங்களைச் சேகரித்துள்ளனர்.

மே 26 ஆம் தேதி அந்த சிறுமியின் தாயார் மூச்சு திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் காலமானார் என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

எடியூரப்பா, பஜகவின் மத்திய பாராளுமன்ற மற்றும் தேர்தல் குழு உறுப்பினராவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com