லிதுவேனிய அரசியலை புரட்டிப் போட்ட முன்னாள் தொழிற்சங்க தலைவி! யார் இவர்?

Inga Ruginienė - Lithuania prime minister
Inga Ruginienė - Lithuania prime minister
Published on

ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றாக லிதுவேனியா உள்ளது. அந்த நாட்டில் வர்த்தகம் மற்றும் அரசியல் நெறிமுறை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் காரணமாக, அதன் பிரதமர் ஜின்டாடாஸ் பலுக்காஸ், ஜூலை 31 அன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சமூக ஜனநாயகக் கட்சி பிரதமர் பதவிக்கு இங்கா ருகெனீனே என்ற பெண்மணியின் பெயரை முன்மொழிந்தது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 78 பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கா ருகெனீனேவிற்கு ஆதரவாக வாக்களித்தனர், அவருக்கு எதிராக 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதிக ஆதரவு வாக்குகள் பெற்று இங்கா ருகெனீனே பிரதமரானார். லிதுவேனியாவின் புதிய பிரதமராக சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவரை செவ்வாய்க்கிழமை லிதுவேனியா நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

பிரதமர் இங்கா, 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி டிராக்காயில் நகரில் பிறந்தார். பின்னர் தலைநகர் வில்னியஸில் கல்வி பயின்ற அவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை அங்கேயே கழித்தார். இங்காவின் உறவினர்கள் பலரும் உக்ரைன் நாட்டில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு விடுமுறைக்கும் அவர் அங்கு சென்று விடுவார், அப்போது உக்ரைன் சோவியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

இப்போது இங்கா உக்ரைன் ஆதரவாளராக இருக்கிறார், அவ்வப்போது ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளார். அவரது வாழ்க்கையில் 3 நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 44 வயது ஆகும் இங்கா ருகெனீனே இதற்கு முன்னர் தொழிற்சங்க தலைவராக தனது அரசியல் வாழ்வை துவங்கி இருந்தார். அவர் லிதுவேனியாவின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராகவும், ஐரோப்பிய தொழிலாளர் அமைப்புகளிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இங்கா ஒரு புத்தகப் பிரியர், அடிக்கடி துப்பறியும் நாவல்களையும், திரில் கலந்த மர்மக் கதைகளையும் விரும்பி படிக்கிறார். அவருக்கு தி லிட்டில் பிரின்ஸ் புத்தகம் மிகவும் விருப்பமானது. புத்தகம் படிப்பது மட்டுமல்லாமல் ஓவியம் வரைவதிலும் திறமை பெற்றுள்ளார். பரபரப்பான அவரது அரசியல் வாழ்க்கைக்கு மத்தியில் அடிக்கடி பயணம் செய்வதும் அவருக்கு பிடித்தமானது.

இதையும் படியுங்கள்:
இனி அர்ஜென்டினாவுக்கு விசா இல்லாமல் செல்லலாம்… ஆனால், இது கட்டாயம்!
Inga Ruginienė - Lithuania prime minister

2023 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சற்று முன்பாகதான் அவர் சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தார், 2024ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. தற்போது புதுமுகமான இவருக்கு பிரதமர் பதவியும் கிடைத்துள்ளது.

புதிய அரசாங்கத்தை அமைக்க சமூக ஜனநாயகக் கட்சி திங்களன்று மற்ற இரண்டு கட்சிகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 141 இடங்களில் 82 இடங்கள் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த கூட்டணியில் நெமுனாஸ் விடியல், லிதுவேனியன் விவசாயிகள் மற்றும் பசுமைக் கட்சி சங்கம், கிறிஸ்தவ குடும்பக் கூட்டணி மற்றும் மூன்று சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளர்கள்.

இதையும் படியுங்கள்:
சாலையோர வியாபாரிகளுக்கு குட் நியூஸ்..! ரூ.50,000 வரை கடன் பெறும் திட்டம் நீட்டிப்பு..!
Inga Ruginienė - Lithuania prime minister

புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ள இங்காவிற்கு பல சவால்கள் உள்ளன. மத்திய அரசை நிலைத் தன்மையுடன் அவர் கொண்டு செல்ல வேண்டும். தற்போது இங்காவின் கூட்டணிக் கட்சிகளை கண்டித்து நாடாளுமன்றத்தின் வெளியே பெரிய ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது. அடுத்த 15 நாட்களில் ஜானாதிபதி ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரு அமைச்சரவையை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நலன் போன்ற பிரச்சினைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் உணர்த்தும் வகையில் செயல்பாடு இருப்பது அவசியம். பிரதமராக இங்கா தனது முதல் வெளிநாட்டுப் பயணங்களை போலந்து மற்றும் உக்ரைனுக்கு மேற்கொள்ள உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com