முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!

Manmohan singh
Manmohan singh
Published on

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் உயிரிழந்தார். அவருக்கு வயது 92. மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக கூறினர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். தற்போது 92 வயதாகும் அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்து இருந்த மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

1991-ம் ஆண்டு பிரதமராக பி.வி.நரசிம்ம ராவ் பதவி ஏற்றபோது, அவரது மந்திரி சபையில் மன்மோகன் சிங், நிதி மந்திரியானார். நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த வேளையில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அதை சமாளித்தார். கல்வியாலும், நிதித்துறை நிர்வாக அனுபவத்தாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநராக மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார்.

2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங். இந்தியாவின் 14வது பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங், சிறந்த சிந்தனையாளராகவும், அறிஞராகவும் கருதப்படுகிறார். இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சீக்கிய பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தலைமுறை தலைமுறைக்கும் உடன் இருந்து அருள் செய்யும் திருமகள்!
Manmohan singh

மே 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவை (BJP) தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸின் தலைவரான சோனியா காந்தி பிரதமர் பதவியை நிராகரித்து அதற்கு பதிலாக சிங்கை அந்தப் பதவிக்கு பரிந்துரைத்தார். சோனியா காந்தியின் பரிந்துரையை ஏற்று மன்மோகன் சிங் ஆட்சியை அமைத்து பதவியேற்றார்.

மே 2009 -ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தனது சட்டமன்ற தொகுதிகளை அதிகரித்து, சிங் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலை மற்றும் காங்கிரஸ் கட்சி அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் சிங்கின் இரண்டாவது ஆட்சியின் போது ஆட்சியைத் தடைசெய்தது. மேலும் வாக்களிக்கும் மக்களிடையே கட்சியின் புகழ் மோசமடைய வழிவகுத்தது. 2014 -ம் ஆண்டின் தொடக்கத்தில் மன்மோகன் சிங், மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கப் போவதில்லை என்று அறிவித்தார். பாஜகவின் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற அதே நாளில், மே 26-ம் தேதியன்று அவர் பதவியில் இருந்து விலகினார்.

இதையும் படியுங்கள்:
மனிதர்களைப் போலவே நாய்களுக்கும் விட்டமின்கள் அவசியமா?
Manmohan singh

டாக்டர் மன்மோகன் சிங் செப்டம்பர் 26, 1932 அன்று பஞ்சாபில் பிறந்தார். டாக்டர் சிங்குக்கு மனைவி குர்சரண் கவுர் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

காலமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவாக 7 நாட்களுக்கு தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com