
ஸ்ரீமத் பகவத் கீதையில், ‘தனக்கு நான்கு விதமான பக்தர்கள் இருக்கிறார்கள்’ என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே அர்ஜுனனிடம் சொல்லி இருக்கிறார்.
‘சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந
ஆர்தோ ஜிஞ்ஞா ஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப’
என்று பதினேழாவது அத்தியாயத்தில், “அர்ஜுனா, என்னிடம் வரக்கூடிய நான்கு விதமான பக்தர்களில் முதல் வகையானவர்கள் ‘ஆர்த்த:’ அதாவது, ஏகப்பட்ட மனக்கஷ்டங்கள், பணக்கஷ்டம், உடல் உபாதையினால் அவதிப்பட்டுக் கொண்டு அந்தக் கஷ்டங்களை நான் தீர்ப்பேன் என்ற நம்பிக்கையோடு வருபவர்கள். இரண்டாமவர், ‘அர்தார்தீ:’ அதாவது, எங்களுக்கு இன்னும் வேண்டும் என மென்மேலும் வேண்டும் என்ற வேண்டுதலோடு வருபவர்கள். மூன்றாமவர், ‘ஜிஞ்ஞாஸு:’ தங்களுக்கு ஆத்ம ஞானம் வேண்டும் எனக் கேட்டு வருபவர்கள். நான்காமவர்கள் ’ஞானி’ எங்களுக்கு நீ மட்டுமேதான் வேண்டும் கிருஷ்ணா. வேறெதுவுமே வேண்டாம், வேறெதுவும் எங்களுக்குத் தேவையும் இல்லை. நீ எங்களோடு எப்பவும் இரு. அது எங்களுக்குப் போதும் என்றிருப்பவர்கள்” என்கிறார்.