நான்கு நாட்கள் சிறப்பு காட்சிகளா? தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்?

Ajith - vijay
Ajith - vijay

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12ந்தேதி முதல் 18ந்தேதிவரை சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகை நாட்களில் ஒரேயொரு முன்னணி நடிகரின் படம் மட்டும் ரிலீஸ் ஆகிறது என்றாலே கொண்டாட்டமும், கும்மாளமும் களைகட்டும். தற்சமயம், தல மற்றும் தளபதி இருவரின் படங்களும் பொங்கல் அன்று ஒரே நாளில் வெளியாவதால் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் கூடியிருந்தாலும், மறுபக்கம் ரசிகர்களின் கொண்டாட்டம் எப்படி இருக்குமோ அதே போன்று தியேட்டர் ஓனர்களுக்குமே கொண்டாட்டமாக இருந்து வருகிறது என்று தான் கூற முடியும்.

Varisu - Thunivu
Varisu - Thunivu

விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. விஜய்யின் வாரிசு படத்துடன் தல அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு களமிறங்குகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் ரேஸில் விஜய்யும், அஜித்தும் நேரிடையாக மோதவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.

cinema
cinema

தல மற்றும் தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்புக் காட்சிகளை திரையிட தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே போகிபண்டிகை, பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என 14-1-2023 முதல் 17-1-2023 வரை 4 நாட்கள் சிறப்பு காட்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் பொங்கல் தினத்திற்கு ஒரு சில நாட்கள் முன்பே புது திரைப்படங்கள் ரிலீசாவதை கருத்தில்கொண்டு, வரும் 12-1-2023, 13-1-2023 ஆகிய நாட்களிலும் மற்றும் 18-1-2023 தேதியிலும் சிறப்புக்காட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com