

அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது இளைஞர்கள் பலருடைய கனவாகும். தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்கு அடுத்து, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் (RRB) நடத்தப்படும் தேர்வுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்நிலையில் தற்போது 22,000 குரூப் டி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது ஆர்ஆர்பி. இந்த வேலையில் சேர்வதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே போதும் என்பதால், தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும்.
இந்தப் பணிகளுக்கு ஜனவரி 31 முதல் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே தேர்வுக்கு தயாராவது எப்படி, என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து இலவச பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இந்தப் பயிற்சியில் சேர்வது எப்படி மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது பார்ப்போம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02-03-2026
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://www.rrbchennai.gov.in/ or https://www.rrb.gov.in/
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாநில தொழில் நெறி வழிகாட்டு மையம், ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுக்கான கட்டணமில்லா இலவச பயிற்சி வழங்குகிறது.
திறமை வாய்ந்த மற்றும் அனுபவம் மிக்க பயிற்றுநர்களை கொண்டு இந்த இலவசப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது கடந்த பிப்ரவரி 11-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, இந்தப் பயிற்சி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சியில் ஏற்கனவே மாணவர்கள் பலர் சேர்ந்துள்ள நிலையில், இன்னமும் மாணவர்களைச் சேரக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு பாடக் குறிப்புகள் வழங்கப்படுவதோடு, அனைத்து தலைப்புகளும் விரிவாக எடுத்துரைக்கப்படும். அதோடு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் அடிப்படையில் அவ்வப்போதும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
இலவச பயிற்சி விவரங்கள்:
* கடந்த பிப்ரவரி 11ம் தேதி முதல் நடந்து வரும் இந்த பயிற்சி, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்று வருகிறது.
* வார இறுதி நாட்களைத் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஐந்து நாட்களில் பயிற்சிகள் நடத்தப்படும்.
* இடம்: செனனை கிண்டியில் உள்ள மாநில தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் பயிற்சிகள் நடக்கின்றன.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மாநில தொழில் நெறி வழிகாட்டு மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டடம், திருவிக தொழிற்பேட்டை கிண்டி, சென்னை - 600 032.
மேலும் விவரங்களுக்கு: 9361566648 / 044-22500134 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
மத்திய அரசு வேலைகளில் ரயில்வே வேலை மிக முக்கியமானது. ஆகையால் தேர்வர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.