மெரினாவில் இலவச வைஃபை: சென்னை மாநகராட்சி திட்டம்!

Marina Beach
Marina Beach
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சென்னை மெரினாவில் பொதுமக்களுக்கு இலவச வைஃபை இணைய சேவை வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி விரைவில் செயல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

 -இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது;

 சென்னை மெரினா கடற்கரையில் வாக்கிங் செல்லும் பாதசாரிகளுக்காக சர்வீஸ் சாலை நிறுவப் பட்டுள்ளது. இந்த பாதையில் சிறுவர் பூங்கா, கண்கவர் சிற்பங்கள் போன்றவை ஏற்படுத்தப் பட்டுள்ளன.

இந்நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு இலவச வைஃபை இணைய சேவை வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. அந்த வகையில் மெரினா கடர்கரையில் கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை 5 இடங்களில்  wifi hotspot நிறுவப்படவுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் சென்னை மாநகராட்சி இணைந்து செயல்படுத்த உள்ள இந்த இலவச இணைய சேவை திட்டம் ஓரிரு மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.

 -இவ்வாறு சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com