மதுரை மகளிர் விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து இரண்டு பெண்கள் பலி!

Madurai ladies hostel
Madurai ladies hostel
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

மதுரையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் திடீரென்று ஃப்ரிட்ஜ் வெடித்து இரண்டு பெண்கள் பலியான செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போன் வெடித்து சிதறும் நிறைய செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஃப்ரிட்ஜ் வெடித்து சிதறி உயிரை எடுத்த சம்பவம் தற்போது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போது வேறு ஊர்களில் பணிக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும், கல்லூரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, கோயம்புத்தூருக்கு சென்று படிக்கும் மாணவர்களும் வேலைக்கும் செல்லும் மாணவர்களும் ஏராளம்.

சிலர் தனியாக வீடு எடுத்து தங்கி வேலைக்கு செல்கின்றனர். மேலும் பலர், விடுதியில் தங்கிதான் பணிக்கும் கல்லூரிக்கும் செல்கின்றனர்.

அந்தவகையில், மதுரை மாவட்டத்தில் கட்ராபாளையத்தில் செயல்பட்டு வரும் ஒரு விடுதி விசாகா பெண்கள் விடுதி. இங்கு பணிக்கு மற்றும் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் தங்குகின்றனர். இங்கு சுமார் 40 பெண்கள் தங்கி வருகின்றனர். இங்கு அதிகாலை திடீரென்று குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறி தீப்பிடித்ததால், பல பெண்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகச் சிறந்த நாடு எது தெரியுமா?
Madurai ladies hostel

இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தில் பரிமளா, சரண்யா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பெண்கள் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. பிரிட்ஜ் வெடித்து சிதறி லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்த 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com