

பாரா மதியில் நடைபெறவிருந்த தேசியவாத காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, மும்பையிலிருந்து தனி விமானத்தில் சென்ற மகாராஷ்டிர மாநிலத் துணை முதலமைச்சர் அஜித் பவார், விமானம் பைலட்டுகளின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கினார். இன்று காலை 8:30 மணியளவில் அவரும் அவரது உதவியாளர்களும் உயிரிழந்ததாக வெளிவந்துள்ள செய்தி, அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரான சரத் பவாரின் அரசியல் வாரிசாக மராட்டிய அரசியலில் காலடி எடுத்து வைத்து வெற்றி வாகை சூட்டியவராகவே அஜித் பவார் அறியப்படுகிறார். முதல் முறையாக 1991 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாராமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியல் அதிகார பணியில் அடியெடுத்து வைத்தவர் அஜித் பவார். 1991 ஆம் ஆண்டு முதல் மராட்டிய மாநில வேளாண் துறை அமைச்சராக முதன் முதலில் பதவியேற்றவர் என்ற சிறப்பு மிக்கவர்.
அஜித் அனந்திராவ் பவார் 22 ஜூலை 1959 ம் ஆண்டு டேஹூ, புனே மாவட்டம், மகாராஷ்டிராவில் பிறந்தவர். விவசாய குடும்பத்தில் வளர்ந்து சர்க்கரை ஆலைகள், விவசாயம், நீர்ப்பாசனம் போன்ற துறைகளில் ஆரம்ப காலத்திலேயே ஈடுபாடுடன் இருந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) நெடுங்கால தலைவரான சரத் பவார் ஆதரவுடன் அவரின் மருமகனாக அஜித் பவார் அரசியல் களத்தில் அறிமுகமானார்.
1991 – முதன்முறையாக மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று அதன்பின் பலமுறை MLA ஆக வெற்றி பெற்று, மாநில அரசியலில் சக்திவாய்ந்த தலைவராக உயர்ந்தார். பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் விவசாயிகளின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார். மகாராஷ்டிர அரசியலில் அதிகார மையம், அனுபவம், விவாதம் என்ற மூன்றையும் ஒரே நேரத்தில் கையாளும் திறன் கொண்ட தலைவர்.
அஜித் பவாரின் அரசியல் பாணி,திட்டமிடல், நீண்டகால சிந்தனை, அதிரடி, நேரடி, வேகமான முடிவுகள் என்ற போக்கில் இருந்த நிலையில் அஜித் பவார், BJP–Shinde கூட்டணியை ஆதரித்து, மகாராஷ்டிர அரசில் துணை முதல்வர் பதவி பெற்றது மகாராஷ்டிரா அரசியலில் சர்ச்சைகளையும் NCP இடையே பிளவையும் உண்டாக்கி
அஜித் பவார் பிரிவு (Ajit Pawar faction) – BJP உடன் கூட்டணி; சரத் பவார் பிரிவு (Sharad Pawar faction) என தனித்தனியே உருவானது. மத்திய தேர்தல் ஆணையம் (Election Commission) 2024 பிப்ரவரி 6 அன்று அஜித் பவார் தலைமையிலான பிரிவை உண்மை NCP என அறிவித்து, கட்சியின் clock சின்னத்தையும் வழங்கியது.
அஜித் பவாரின் செயல்கள் பெரும்பாலும் பாராட்டப்பட்டாலும் சில நேரங்களில் சர்ச்சையான உரைகள், நிர்வாக முடிவுகள் காரணமாக விமர்சனங்களுக்கு உள்ளானவர். இருப்பினும், அரசியல் செல்வாக்கும் தேர்தல் வெற்றிகளும் அவரை முக்கிய அரசியல் முகமாக அசைக்க முடியாத இடத்தைத் தந்தது.
மகாராஷ்டிர துணை முதல்வர் பதவியை பலமுறை வகுத்துள்ளதுடன்நிதி, நீர்ப்பாசனம், கிராம வளர்ச்சி போன்ற முக்கிய துறைகளில் அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர் கடுமையான நிர்வாக பாணி, வேகமான முடிவுகள் எடுப்பவர் என அறியப்படுகிறார்.
மிகப் பெரிய செல்வாக்கு கொண்டவராக இருந்தாலும் அஜித் பவார் எளிய மக்களுக்காக ஆதரவு காட்டியது அவரது மதிப்பை உயர்த்தியது எனலாம்.
அஜித் பவாரின் முக்கிய அமைச்சுப் பணிகள் (Year-wise) பற்றிய விபரங்கள் இங்கு..
1999 – 2003 மகாராஷ்டிரா மாநில அமைச்சர் துறை: நீர்ப்பாசனம் (Irrigation), மின்சாரம் அணைகள், நீர்த்தேக்கத் திட்டங்களில் முக்கிய பங்கு
2004 – 2009 நீர்ப்பாசனம் அமைச்சர்மேற்குப் மகாராஷ்டிராவில் நீர்ப்பாசன விரிவாக்கம் சர்க்கரை தொழில் – விவசாய இணைப்பு வலுவடைந்த காலம்
2009 – 2014 மகாராஷ்டிர துணை முதல்வர் (Deputy CM) நிதி அமைச்சர் (Finance Minister)
மாநில பட்ஜெட், வளர்ச்சி திட்டங்களில் முக்கிய செல்வாக்கு, குறிப்பாக “Super Minister” என அழைக்கப்பட்ட காலம்
2019 (நவம்பர் – குறுகிய காலம்) துணை முதல்வர் (சில நாட்கள் மட்டும்)அரசியல் திருப்பங்களால் கவனம் பெற்ற காலம்
2019 – 2022 துணை முதல்வர் (MVA அரசு) நிதி துறை கொரோனா கால நிதி மேலாண்மை , மாநில வருவாய் – செலவு சமநிலை
2023 – தற்போது வரை துணை முதல்வர், மகாராஷ்டிரா
எம்பி பதவியை ராஜினாமா செய்த பிறகு 1991 முதல் 2019 வரை தொடர்ந்து 28 வருடங்கள்.பாராமதி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர். 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக பிரித்விராஜ் சவால் அரசில் துணை முதலமைச்சர் ஆக பதவியேற்றார் அஜித் பவர் தேவேந்திரபட் நாயக், தாக்கரே அரசுகளிலும் துணை முதலமைச்சர் ஆக பணியாற்றியது சிறப்பு. மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக சுமார் 81/2 (எட்டரை)வருடங்கள் துணை முதலமைச்சர் ஆக பணியாற்றியவர் அஜித் பவர்தான்.
தனது சித்தப்பா வசம் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை கடந்த 2023 ஆம் ஆண்டு கைப்பற்றிய அஜித் பவார் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடைபெற்ற மராட்டிய சட்டப்பேரவை தேர்தலில் 50 இடங்களில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
மராட்டிய அரசியலில் மாபெரும் சக்தியாக இருந்து வந்த அஜித் பவார் எனும் கருணை மற்றும் வலிமை மிக்க தலைவரை எதிர்பாராமல் இழந்த அதிர்ச்சி மற்றும் வேதனையில் தற்போது மராட்டிய மக்கள் இருக்கின்றனர் என்றால் மிகையல்ல.