நுகர்வோருக்கு மெகா குட் நியூஸ்! 96.6% பொருட்களுக்கு வரி நீக்கம்..! 110% ஆக இருந்த கார் வரி 10% ஆக குறைப்பு..!

India-EU FTA
India-EU FTA source: timesdrive
Published on

இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் வரலாற்று சிறப்புமிக்க பல வர்த்தக ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டது. ​இந்தியப் பொருளாதார வரலாற்றில் இது ஒரு மிகமுக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. சுமார் 20 வருடங்களாக நீடித்த இந்த காத்திருப்பு, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இது நிச்சயம் ஒரு பேரதிர்ச்சியை உண்டாக்கும்.

​புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் பங்கேற்றனர்.ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் , இந்தியச் சந்தையைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அந்நிய நேரடி முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் விளைவாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் விலை உயர்ந்த ஐரோப்பிய கார்களின் விலை பெருமளவில் குறையக்கூடும். மேலும் ஒயின்கள், சாக்லேட்டுகள், மருந்து உபகரணங்கள் , மருந்துகள், ஆடைகள் ஆகியவை விலை பெரும்பளவில் குறையும். இந்தியாவிற்கு இறக்குமதியாகும் அனைத்து ஐரோப்பிய பொருட்களின் இறக்குமதி வரிகளும் கடுமையாக குறைய உள்ளது.

இதனால் விவசாயம், உணவு மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் உள்ள இந்திய நுகர்வோருக்கு பல பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும்.

இந்தியாவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுமதி செய்யும் பொருட்களில் சுமார் 96.6 % வரிகள் முழுமையாக நீக்கப்படும். இதனால் ஐரோப்பிய ஏற்றுமதியாளர்கள் ஆண்டுதோறும் €4 பில்லியன் வரை சுங்க வரிகளை மிச்சப்படுத்தி லாபம் அடைவார்கள்.

இந்த ஒப்பந்தம், சாக்லேட், ஒயின் மற்றும் கார்கள் போன்ற பொருட்களுக்கான தற்போது உள்ள 50 முதல் 150% வரையிலான வரிகளை 20% முதல் 0% வரை குறைக்கும். சிவப்பு நாடாவை குறைத்து சந்தை அணுகலை எளிதாக்குவதன் மூலம், எல்லை தாண்டிய வர்த்தகத்தை வேகமாகவும், எளிமையாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றுவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள குடிமக்கள் மற்றும் வணிகங்களுக்கு பெரிய நன்மை பயக்கும் என்றார்.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் இலவச HPV தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!
India-EU FTA

எந்த பொருட்கள் மலிவாகக் கிடைக்கும்?

இயந்திரங்கள் மற்றும் மின் உபகரணங்கள் , விமானம் மற்றும் விண்கலம் ஆகியவற்றிற்கு முன்பு 44% முதல் 11% இருந்த வரி இப்போது 0% அளவில் இருக்கும். ஒளியியல், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் ஆகியவற்றிற்கு 0% வரி விதிக்கப்படும். முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றில் 20 சதவீத பொருட்களுக்கு மட்டும் வரி குறைக்கப்படும். மோட்டார் வாகனங்கள் வரி 10% ஆக மாற்றப்படும் முன்பு 110% வரி இருந்தது.

அனைத்து வகையான மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். பழச்சாறுகள் , உணவுப் பொருட்கள் , ஆல்கஹால் இல்லாத பானங்கள் , இறைச்சி ஆகியவற்றிற்கு 0% வரி விதிக்கப்படும். ஆலிவ் எண்ணெய் , வெண்ணெய் மற்றும் தாவர எண்ணெய்களுக்கு 0% வரி இருக்கும். இதனால் , இந்தியாவில் ஐரோப்பிய பொருட்கள் , கார்கள் ஆகியவை மலிவு விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
மகளிருக்கான 'TNWESafe' மெகா திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!
India-EU FTA

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com