இது தெரியுமா ? உணவக பில்லில் இப்படி இருந்தா ஜிஎஸ்டி கட்ட தேவையில்லை..!

இனிமேல் ஹோட்டலுக்கு சாப்பிட போகும் போது உங்க பில்லில் ஜிஎஸ்டி நம்பர் இருக்கானு பார்க்க மறந்துடாதீங்க..
check GST in hotel bill
check GST in hotel bill
Published on

ஜிஎஸ்டி (GST) என்பது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியாகும். இது பல்வேறு மத்திய மற்றும் மாநில வரிகளுக்குப் பதிலாக ஒரே வரியாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்தது.

அந்த வகையில் இந்தியாவில் நடைமுறையில் இருந்த 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி தற்போது, 2 அடுக்காக அதாவது, 5 சதவீதம், 18 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கமானது, இந்த மாற்றத்தை ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) என்று அழைக்கிறது. இந்த விதிமுறை கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

உணவகங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது, இது உணவகம், உணவகத்தின் இருப்பிடம், உணவகம் அமைந்துள்ள வளாகம் மற்றும் உணவு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைப் பொறுத்து 5%,12%, அல்லது 18% என்ற விகிதத்தில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

நீங்கள் ஒரு உணவகத்திற்கு உணவருந்த போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உணவருந்தி முடித்த பின்னர் நீங்கள் சாப்பிட்டதற்காக பில் வரும். அந்த பில்லில் நாம் சாப்பிட்ட உணவிற்கான தொகையுடன் ஜிஎஸ்டி சேர்த்து போட்டு தருவார்கள்.

ஆனால் நிறைய இடங்களில் ஜிஎஸ்டி என்று குறிப்பிட்டிருக்குமே தவிர ஜிஎஸ்டி நம்பர் எதுவும் இதில் இருக்காது. நிறைய இடத்தில் பேருக்கு ஜிஎஸ்டி இத்தனை சதவீதம் என்று போட்டு பணம் வாங்கி ஏமாற்றி விடுகிறார்கள். அப்படி ஜிஎஸ்டி நம்பர் இல்லாத போது நீங்கள் அதுகுறித்து உணவகத்தில் கேட்கலாம்.

ஒருவேளை பில்லில் ஜிஎஸ்டி நம்பர் போட்டிருந்தாலும் நீங்க கூகுளில் www.gst.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அந்த பில்லில் உள்ள ஜிஎஸ்டி நம்பரை போட்டு பார்த்தால் அது ரெகுலர் ஜிஎஸ்டியா(taxpayer type) அல்லது composition ஜிஎஸ்டியா (composition taxable person not eligible to collect tax on supply) என்பதை செக் பண்ணி பாருங்க. ஒருவேளை composition ஜிஎஸ்டி என்பதில் அந்த ஹோட்டல் ரிஜிஸ்டராகி இருந்தால் நீங்கள் அதற்கு ஜிஎஸ்டி கட்டவேண்டிய அவசியமில்லை.

இதையும் படியுங்கள்:
நட்சத்திர உணவகங்களில் நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் சங்கடமான சூழ்நிலைகள்!
check GST in hotel bill

இனிமேல் ஹோட்டலுக்கு சாப்பிட போகும் போது உங்க பில்லில் ஜிஎஸ்டி நம்பர் இருக்கானு பார்க்க மறந்துடாதீங்க..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com