சென்னையில் ஜிபே மூலம் ஒரு திருட்டு சம்பவம் நடந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷமயாக உள்ளது. இதன்மூலம் எந்தளவிற்கு மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம்.
ஜெய்னுல் அனீப் மற்றும் அவரது நண்பர்கள் குடிபோதையில் இருந்தபோது, மர்ம நபர்கள் கத்தி முனையில் மிரட்டி அவர்களது வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை வேளச்சேரி பகுதியில் நடந்துள்ளது.
ஜெய்னுல் அனீப் (25) தனது நண்பர்களான முகமது நவாஸ் (24) மற்றும் முகமது இப்ராஹிம் (26) ஆகியோருடன் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். மூவரும் விடுதிக்கு வெளியே பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென 8 மர்ம நபர்கள் அவர்களை அணுகி கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். குடிபோதையில் இருந்ததால் அவர்களால் உடனடியாக சுதாரித்துக் கொள்ள முடியவில்லை.
கத்தி முனையில் மிரட்டி, ஜெய்னுல் அனீப், அவரது நண்பர்கள் முகமது நவாஸ் மற்றும் முகமது இப்ராஹிம் ஆகியோரின் கழுத்தில் கத்தியை வைத்து, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை தங்களது ஜி-பே கணக்கிற்கு மாற்றி கொள்ளையடித்துள்ளனர்.
பணத்தை கொள்ளையடித்த பிறகு, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர், ஜெய்னுல் அனீப், அவரது நண்பர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை விரிவாக தெரிவித்து புகார் அளித்தனர்.
இது குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 8 பேரும் ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, சேத்துப்பட்டு, கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களிடமிருந்து ஒரு கார், 5 செல்போன்கள், 2 கத்திகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
காலத்திற்கேற்ப மாறிவிட வேண்டுமென்று, வழிப்பறி கொள்ளையர்களும் மாறிவிட்டார்கள். டிஜிட்டல் முறையில் கொள்ளையடிப்பதன்மூலம் ஒருவரும் தப்பிக்கவே முடியாது என்று திருடர்கள் இறங்கிவிட்டார்கள். பிச்சை எடுப்பது முதல் கைவரிசை காண்பிப்பதுவரை அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கே முன்னேறிவிட்டனர். உஷார் மக்களே!!!!