காசாவின் மேற்கு கரை இனி நரகம்தான் – ஐநா எச்சரிக்கை!

Gaza
Gaza
Published on

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தற்போது மிகவும் மோசமாக இருந்து வரும் நிலையில், இனி வரும் காலங்களில் காசா ஒரு நரகம் போல் இருக்கும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலால், காசாவில் மருத்துவமனைகள், ஐநா அலுவலகங்கள் தவிர்த்து அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது. அந்த அளவுக்கு எட்டு மாதங்களாக போர் கொடூரமாக நடைபெற்று வருகிறது.

200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று உலகநாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின.

போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

இதில், ​​மத்திய கிழக்கு அமைதி செயல்முறைக்கான ஐ.நா. சிறப்பு ஒருங்கிணைப்பாளர் டோர் வென்னஸ்லேண்ட், "இஸ்ரேலின் தாக்குதல் இப்பிராந்தியத்திற்கு மேலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். நரகம் போல் இருக்கும். இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கங்கள் சட்டப்பூர்வமானது கிடையாது.

இதையும் படியுங்கள்:
T20 Worldcup 2024: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா அணி!
Gaza

சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா தீர்மானங்களை அப்பட்டமாக இஸ்ரேல் மீறுகிறது. அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேல் அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் போரில் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். " என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் தற்போது யாருடைய பேச்சையும் கேட்காமல் போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அவர்கள் கண்முண் தெரியாமல், மக்களையும் தாக்குகின்றனர். இதில் அப்பாவி மக்களே காசாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஓடி ஒளிகின்றனர். ஆனால், அதைப் பற்றி கவலைக்கொள்ளாமல், இஸ்ரேல் போர் நிறுத்தம்பற்றி எந்த யோசனையும் செய்யாமல் இருப்பது அனைத்து நாட்டு மக்களுக்கும் வேதனை அளிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com