

2050-க்குள் நம் உலக மக்கள் தொகை சுமார் 9.8 பில்லியனைத் தொடும்போது, இத்தனை கோடி மக்களுக்கும் உணவு கிடைக்குமா என்ற கேள்வி தீவிரமாக எழுந்துள்ளது.
உணவுக்கு அலையும் மக்கள் கூட்டம் ஒருபுறம் இருக்க, நாம் உணவுக்காகப் பயன்படுத்தும் விவசாய முறைகள் பூமியின் வளங்களைக் குறைத்து வருவது மற்றொரு கவலை.
இந்தச் சூழலில், சுற்றுச்சூழலுக்குக் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தி, அதே நேரத்தில் அதிகப் புரதச்சத்து தரும் ஒரு புரட்சிகரமான உணவுத் தீர்வு தேவைப்படுகிறது.
இங்கே ஒரு சூப்பர் நியூஸ் இருக்கு! மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு புது காளான் வந்திருக்கு. இதுதான் எதிர்காலத்தில் நம் எல்லோருக்குமான ஆரோக்கியமான உணவை வடிவமைக்கப் போகுது.
சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், ஜீன்களை மாற்றி அமைக்கப்பட்ட இந்தக் காளானை கண்டுபிடிச்சிருக்காங்க.
இது சுவையில் அப்படியே இறைச்சி மாதிரியே இருக்குமாம்! ஆச்சரியம் என்னன்னா, இதை தயாரிக்கும்போது சுற்றுச்சூழல் பாதிப்பு 61% குறைகிறது.
CRISPR தொழில்நுட்பமும், GMO தெளிவும்
சீனாவின் ஜியாங்னான் பல்கலைக்கழகக் குழு, CRISPR என்ற அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்பைச் செய்தது.
இதுல நாம ஒரு விஷயத்தை முக்கியமா தெரிஞ்சுக்கணும்:
அந்தக் காளானுக்குள்ள வெளியிலிருந்து ஒரு துளி DNA-வும் சேர்க்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, அதனுடைய சொந்த ஜீன்களில் நமக்குத் தேவையில்லாத ரெண்டு பகுதிகளை மட்டும் நீக்கி (Delete) ஒழுங்குபடுத்தி இருக்காங்க.
வேலை இவ்வளவுதான்! அதனால, இது வெளிப்படையான GMO-ன்னு சொல்லி இருக்காங்க.யாரும் பயப்படத் தேவையில்லை.
சைவம் ஆனால் அசைவ உணர்வு
Fusarium venenatum என்ற இந்தக் காளான் வகை முழுக்க சுத்த சைவமானது. ஆனால், அசைவம் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு அதே உணர்வைத் தரும் வகையில் இதை மாற்றியமைத்துள்ளனர்.
இந்தக் காளானின் இயற்கையான இறைச்சி போன்ற அமைப்பு (Texture) இருப்பதால், அசைவம் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கும் அதே திருப்தியான மெல்லும் அனுபவத்தை இது தரும் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காளானின் சாதனைகள்
உண்மையில், இந்த FCPD காளானில் செரிமானக் கடினம் (தடித்த செல் சுவர்) மற்றும் அதிக உற்பத்தி நேரம் (அதிக சர்க்கரை தேவை) போன்ற சிக்கல்கள் இருந்தன.
ஜீன் நீக்கத்தின் மூலம், இந்தக் காளானை மனிதர்கள் சுலபமா ஜீரணம் செய்யலாம். மேலும், இது பழைய காளானைவிட 44% குறைவான சர்க்கரையே பயன்படுத்தி, 88% வேகமாக வளருது.
சுற்றுச்சூழல் நன்மைகள்:
விலங்குகளை வளர்ப்பதால் உலகளாவிய மாசு வெளியேற்றத்தில் சுமார் 14% பங்கு இருக்கும் நிலையில், FCPD காளான் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 60% வரை குறைக்கிறது.
கோழிகளை வளர்க்கும் நிலத்தைவிட 70% குறைவான இடமே இதற்குப் போதும். நன்னீர் மாசுபடும் அபாயமும் 78% குறையுது.
இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய சியாவோ லியூ, "வழக்கமான விவசாயச் செலவுகள் இல்லாமல், வளர்ந்து வரும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்" என்று நம்புகிறார்.
இந்தக் காளான் அடிப்படையிலான இறைச்சி, பெரிய அளவில் மக்களிடம் போய்ச் சேர்ந்தால், அது நம்ம எதிர்கால உணவுப் பாதுகாப்பிற்கு ரொம்பவே உதவும்.
இந்த ஆய்வின் முடிவுகள் 'Trends in Biotechnology' என்ற அறிவியல் இதழில் வெளியாகி இருக்கிறது.