மெரினாவில் கிடைத்த ஜெர்மன் துப்பாக்கி!

ஜெர்மன் துப்பாக்கி
ஜெர்மன் துப்பாக்கி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மெரினா கடற்கரையில் கிடைத்த கைத்துப்பாக்கி குறித்து அங்கு பரபரப்பு நிலவியது. அது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலோர பாதுகாப்பு குழுமம், முதல் நிலை காவலராக பணிபுரிபவர் ஆரோக்கியராஜ். இவர் நேற்று மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மெரினா கடற்கரையில் நடந்து கொண்டிருந்த போது, கை துப்பாக்கி ஒன்று கிடைத்ததாக, ஆரோக்கியராஜிடம் ஒப்படைத்தார்.

மெரினா
மெரினா

கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கியில் தோட்டா எதுவும் இல்லை. துப்பாக்கியை கடலோர பாதுகாப்பு ஆய்வாளரிடம் ஆரோக்கியராஜ் ஒப்படைத்தார்.

துப்பாக்கி, மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கி ஜெர்மன் நாட்டு வகை துப்பாக்கியாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தற்போது இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com