அயனாவரம் தவெக கூட்டத்தில் நடந்தது என்ன..? காலி பாட்டிலை வீசியது யார்..? காவல் துறை விளக்கம்..!

aynavaram tvk meeting
aynavaram tvk meeting
Published on

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில் தவெக கட்சியின்  வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற பிரச்சாரக் கூட்டம் சென்னை அயனாவரத்தில் சமீபத்தில் நடந்தது.

கூட்டம் நடந்த போது அருகிலிருந்த கட்டிடத்தில் இருந்து கண்ணாடி மதுபாட்டில்கள் பெண்கள் கூட்டத்தில் வீசப்பட்டதாகவும் அதில் ஒரு தவெக பெண் தொண்டர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்த சம்பவத்தை ஆதவ் அர்ஜுனா கடுமையாக கணாடித்ததுடன்  இதற்கு காரணமாக எதிர்க்கட்சியினரின் செயல் என்று குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை இந்த சம்பவத்துக்கு காரணமான இருவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் தற்போது
மது பாட்டில்களை வீசியவர்கள் அரசியல் கட்சியினர் அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது. அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த இரண்டு பேர் மது போதையில் சண்டையிட்ட போது பாட்டில்கள் தவறி விழுந்ததாக காவல்துறை தகவல் தந்துள்ளது.

பிரச்சாரக் கூட்டங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு அங்கு கூடுபவர்க்கு பாதுகாப்பு தர வேண்டியது கட்சி மற்றும் காவல்துறை கடமை என்று கூறி வருகின்றனர் பொதுமக்கள்.

இதையும் படியுங்கள்:
2ம் கட்ட பரப்புரையை நெல்லையில் தொடங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..!
aynavaram tvk meeting

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com