பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் தங்க, வைர நகைகள் திடீர் மாயம்!

பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் தங்க, வைர நகைகள் திடீர் மாயம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பிரபல சினிமா பின்னணிப் பாடகர் யேசுதாஸ். இவரது இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் தமிழ் சினிமாவில் ப்ரண்ட்ஸ், ஜெயம், ஜூலி கணபதி, அரசு, காதல் கொண்டேன், தாமிரபரணி, ராம், சண்டக்கோழி, தீபாவளி, பொக்கிஷம், ஆயிரத்தில் ஒருவன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், அழகுராஜா வனமகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களைப் பாடி உள்ளார். இவை தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் இவர் பாடல்கள் பாடி இருக்கிறார். மேலும் இவர், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான, ‘மாரி’ திரைப்படத்திலும் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில் விஜய் யேசுதாஸ் வீட்டில் இருந்து 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் திடீரென மாயமாகி இருப்பதாக அவரது மனைவி தர்ஷனா, சென்னை அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் தங்களது வீட்டுப் பணியாளர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய் யேசுதாஸ் வீட்டு நகைகள் திடீரெ மாயமானது குறித்து விசாரணை நடத்த போலீசார் தரப்பில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கடந்த பத்து நாட்களுக்கு முன்புதான் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போய், அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் அந்தத் திருட்டை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டிலும் பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் காணாமல் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com