
தங்கத்தில் மாலை! மணமகள் புடவை ரூ.8 லட்சம்! யாருங்க அந்த அம்பானி.
எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி திருமணம் திருநெல்வேலி மாவட்டத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
திருநெல்வேலியை சேர்ந்த தொழிலதிபர் ஆர்.எஸ். முருகன் வீட்டு கல்யாணம்தான் அது. ஆனால், இதில் மணப்பெண் வேறு யாரும் இல்லை பலருக்கும் பரிச்சயமான நடிகர் வேல ராமமூர்த்தியின் பேத்திதான்.
நடிகர் வேல ராமமூர்த்தி பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் அவர் ஒரு எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். வெள்ளித்திரையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் வேலராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்ததன் மூலம் இவர் சின்ன திரையிலும் கால் பதித்தார்.
இந்த திருமணம் நடத்த திருநெல்வேலி ட்ரேட் சென்டரில் பல லட்சம் செலவு செய்து ஒரு மண்டபம் வடிவத்தில் செட் போட்டிருந்தார்கள். இந்த திருமணம் நடக்கும் இடத்தை அந்த பகுதி மக்கள் எல்லோரும் வியந்து பார்த்து சென்றிருக்கிறார்கள். அதுபோல, இந்த திருமணத்தில் செஃப் மாதம்பட்டி ரங்கராஜன்தான் சமையல் செய்து அசத்தியிருக்கிறார்.
திருமணத்தின்போது, மணமக்கள் மலர்களால் ஆன மாலைகளை அணிந்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், இந்த திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் தங்கத்தால் செய்யப்பட்ட மாலையை அணிந்திருந்திருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல், திருமணத்தின்போது மணமகள் அணிந்திருந்த புடவை ரூ.8 லட்சம் எனவும், அவர் அணிந்திருந்த பிளவுஸ் ரூ.3 லட்சம் எனவும் கூறப்படுகிறது. மணமகளுக்கு சீராக 300 சவரன் நகைகள் வழங்கப்பட்டதாகவும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தற்போது இணையத்தில் இந்த திருமண வீடியோக்கள் பற்றி தான் அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது. அடுத்த அம்பானி என்று ஒரு சிலர் கிண்டல் செய்தாலும், ஒருசிலர் இந்த ஆடம்பரம் தேவையா? என்று கேள்வியும் எழுப்பி உள்ளனர்.