

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரு சவரன் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்தது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,460க்கு விற்பனையானது.மீண்டும் மதியம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,00,120 ஐ தாண்டியது. ஒரு கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515 க்கு விற்பனையானது..
இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,160 உயர்ந்தது.
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகக் கடும் உயர்வைச் சந்தித்து வரும் நிலையில், இன்று (டிசம்பர் 15) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சவரன் 98,960 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விலையில் மாற்றமின்றி காணப்பட்டது. ஆனால், இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து 99,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று மதிய நிலவரப்படி, தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியது. சவரனுக்கு மேலும் 440 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 1,00,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 12,515 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் இந்தத் தொடர் விலை ஏற்றம் நடுத்தர மக்கள் மற்றும் நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.213-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் மீண்டும் ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு இன்று ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், உக்ரைன் - ரஷியா போர், உலக நாடுகளின் மைய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது போன்றவை தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்து, நம் நாட்டிலும், அதன் விலை அதிகரித்து வருகிறது.வெள்ளியிலும் அதிக முதலீடுகள் குவிந்து வருவதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது