ஏறிய வேகத்தில் தொடர்ந்து சரியும் தங்கம் விலை: காரணம் என்ன? மேலும் குறையுமா?... நிபுணர்கள் தரும் விளக்கம்..!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறிய வேகத்தில் சறுக்கலை சந்தித்து வருவதால் அதற்கு காரணம் என்ன? இன்னும் விலை குறையுமா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
Gold
Gold
Published on

மண்ணில் போட்டதும், பொன்னில் போட்டதும் வீணாகாது என்பார்கள். அதனை மெய்யாக்கும் வகையில் தங்கத்தின் விலை விண்ணை முட்டி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளது.

இதன் காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது. தொடர்ந்து உச்சத்துக்கு சென்றுகொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.

கடந்த ஜனவரி மாதம் ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஆனால் கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ.31 ஆயிரத்து 80 அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஜி.எஸ்.டி., செய்கூலி உள்ளிட்டவற்றை சேர்த்தால் நகையாக வாடிக்கையாளரிடம் வந்து சேரும் தங்கம் பவுன் விலை ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடுகிறது.

இதையும் படியுங்கள்:
இப்போ தங்கம் வாங்கவில்லை என்றால் வருத்தப்படுவீர்கள்! விலை குறைய வாய்ப்பே இல்லை.. நிபுணர் எச்சரிக்கை!
Gold

காலங்காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டு வருகிறதே தவிர குறைந்ததாக இல்லை. தற்போதைய சூழலில் இருக்கும் தங்கத்தை பாதுகாத்தாலே லட்சாதிபதியாக தொடரலாம் என்பதே பெரும்பாலானோரின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

இத்தனையும் தாண்டி, விலை உயர்வால் இனி பெண்கள் வெளியில் தங்க நகை அணிந்து செல்லவும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் நிலவுகிறது.

அதாவது, தங்கம் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம். அந்த வகையில் கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் ரூ.87,600 என்று இருந்த தங்கம் விலை, 11-ந்தேதி ரூ.92 ஆயிரத்தையும், 16-ந்தேதி ரூ.95 ஆயிரத்தையும், 17-ம்தேதி ரூ.97 ஆயிரத்தை கடந்து வரலாறு உச்சத்தை அடைந்தது. தங்கம் விலை ஜெட் வேகத்தில் சென்றதால் இந்த ஆண்டின் இறுதிக்குள் பவுன் ரூ.1 லட்சத்தை எட்டிவிடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சாமானிய மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறிய வேகத்தில் சறுக்கலை சந்தித்து வருகிறது. நேற்று (அக்டோபர் 23-ம்தேதி) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,680 அதிரடியாக சரிந்து, ஒரு பவுன் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. தங்கம் விலை எப்படி ஒரே நாளில் 2 முறை ஏற்றம் கண்டதோ, அதே வேகத்தில் நேற்றும் தங்கம் விலை 2 முறை சறுக்கலை சந்தித்து சாமானிய மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது.

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில் வரும் காலங்களில் தங்கத்தின் விலை இன்னும் குறையுமா என்பது குறித்து பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்ததால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் தங்கத்தை, பங்குகளாகவும், தங்க ஒப்பந்தங்களாகவும், டாலருக்கு பதிலாகவும் வாங்கி குவித்து வந்தனர்.

இன்னும் விலை உயரும் என எதிர்பார்த்த இவர்கள் தங்களிடம் இருக்கும் பணம் முழுவதையும் தங்கத்தில் முதலீடு செய்தது மட்டுமில்லாமல், மேற்கொண்டு வட்டிக்கு பணம் வாங்கி அதனைக்கொண்டு தங்கத்தை வாங்கி குவித்தனர்.

இந்நிலையில் தங்கம் விலை உச்சத்தை அடைந்துள்ளால் தங்களிடம் இருக்கும் தங்கத்தை இப்போது விற்றால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கருதி வாங்கிய தங்கத்தை தற்போது நல்ல விலைக்கு விற்று வருகின்றனர். அதனாலேயே தங்கம் விலை குறைகிறது என்றும், கூறிய பொருளாதார வல்லுநர்கள், ஆனால் இன்னும் குறையுமா என்றால் அதற்கு அதிகளவு குறைய வாய்பில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், நிதிச்சந்தையில் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாகவும், தங்கம் விலை உயர்ந்து வருவதாலும் முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும், மேலும் உலகளவில் முக்கிய பங்குச்சந்தைகள் வரலாற்று உச்சங்களை எட்டியிருப்பதால், முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் தங்கத்தில் இருந்து பங்குகள் மீது தங்கள் கவனங்களை திருப்பி இருப்பதாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து இருப்பதாலும் தங்கத்தின் விலை குறைவதாக உலகளவில் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தங்கம் கடந்து வந்த பாதை..! 1980-ல் ஒரு சவரன் தங்கத்தின் விலை என்ன தெரியுமா ?
Gold

மேலும் சில பொருளாதார நிபுணர்கள், வியாபாரிகள் பொதுவாக ஒரு பொருள் குறுகிய காலத்தில் தொடர்ந்து ஏற்றம் கண்டால், ஒரு கட்டத்திற்கு மேல் அது தானாகவே இறங்கத்தான் செய்யும். அந்த வகையில் தங்கத்தின் விலை தற்போது குறைந்து வருவதாகவும் ஆனால் விலைக்குறைவு நிரந்தரமல்ல என்றும் ஒரு கட்டத்திற்கு பிறகு மீண்டும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com