காலையில் வீழ்ச்சி... மாலையில் கிடுகிடு உயர்வு! தங்கம் விலையில் திடீர் திருப்பம்!

காலையில் தங்கத்தின் விலை ரூ.1,920 குறைந்த நிலையில் மாலையில் அதிரடியாக உயர்ந்து அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
தங்க நகை - Jewellery Hidden Charges
தங்க நகை - Jewellery Hidden Charges
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

இந்திய சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று காலையில் (செப்டம்பர் 11) தங்கத்தின் விலை மளமளவென சரிந்தது.

இன்று காலை 22 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,920 குறைந்தது. அதன்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,920 குறைந்து, ரூ.1,12,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் காலையில் தங்கத்தின் விலை ரூ.1,920 குறைந்த நிலையில் மாலையில் அதிரடியாக உயர்ந்து அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அதன்படி ஆபரண தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,920 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,120 உயர்ந்துள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,155க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,120 உயர்ந்து ரூ.1,13,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.245-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாலையில் 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com