

ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் ஆரம்பித்தது முதலே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதாவது ஈரான் போர் ஆரம்பித்தால் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து கச்சா எண்ணெய் மற்றும் டாலர் பக்கம் திரும்பியுள்ளனர்.
இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பெரியளவில் குறைந்துள்ளது. போர் எவ்வளவு காலம் தொடர்கிறதோ.. அவ்வளவு காலம் தங்கம் விலை சரிவு தொடரும் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ.13,620 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ரூ.1,08,960 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ரூ.5,360 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,03,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்து மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.2,240 குறைந்து ரூ.1,01,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,670க்கு விற்பனையாகிறது.
இதற்கிடையே மாலை 6 மணியளில் திடீரென தங்கம் விலை சவரனுக்கு ரூ.5360 உயர்ந்து ரூ.1,6,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.670 உயர்ந்து ரூ.13,340க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 விலை குறைந்திருந்த நிலையில் மீண்டும் உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்திருந்ததால் மக்கள் தங்கம் வாங்கி ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் இன்று காலை, மாலை என இருமுறை தங்கம் விலை குறைந்த நிலையில் மீண்டும் 3-வது முறையாக அதிரடியாக உயர்ந்திருப்பது இனிவரும் நாட்களில் தங்கம் விலை அதிகரிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.