

போரின் எதிரொலியாக ஏற்பட்ட சர்வதேச பொருளாதார சூழலால் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலையில் மாற்றம் தந்துள்ளது . ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.7,600 குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.01 லட்சத்துக்கு வந்துள்ளது தங்க நகைகள் வாங்குவோருக்கு ஜாக்பாட் செய்தியாக உள்ளது.
கடந்த வாரம் சனிக்கிழமை தங்கத்தின் விலை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ.13,620 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 2,640 குறைந்து ரூ.1,08,960 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.14,858 ஆகவும், சவரன் விலை ரூ.1,18,864 ஆகவும் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 2,640 குறைந்து ரூ. 1,08,960-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை ரூ. 5,360 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,03,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்து மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.2,240 குறைந்து ரூ.1,01,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,670க்கு விற்பனையாகிறது.
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
தேதி சவரன் விலை (ரூ.)
மார்ச் 23 1,01,360
மார்ச் 22 1,08,960
மார்ச் 21 1,08,960
மார்ச் 20 1,11,600
மார்ச் 19 1,11,200
மார்ச் 18 1,16,560
மார்ச் 17 1,17,200
மார்ச் 16 1,17,680
மார்ச் 15 1,18,080
மார்ச் 14 1,18,080
மார்ச் 13 1,19,200
வெள்ளி விலை:
சனிக்கிழமை வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 250-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ. 235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று கிலோவுக்கு ரூ. 15,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளியானது ரூ. 2,35,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போரும், வளைகுடாவில் பதற்றமும் நீடித்து வருவதால் சர்வதேச நாடுகளில் பணவீக்க அச்சத்துடன் அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. அதேவேளையில், கையிருப்பு தங்கத்தை விற்கும் நிலையும் நீடிக்கிறது. இவையே ஆபரணத் தங்கம் விலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு காரணம் எனலாம்.
மேலும் உலகளாவிய சந்தைக் காரணிகளான அமெரிக்க டாலர், மற்றும் வட்டி விகிதங்கள் ( Global market factors (US dollar, interest rates) காரணமாக இந்த விலை சரிவு (recent fall) ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறினாலும் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விழைகிறார்கள் தற்போது தங்கம் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள்.இருப்பினும் தற்போதைய சூழலில் அவசியம் தேவைப்படும் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு தாரளமாக நகை வாங்கலாமே தவிர, முதலீடு என்று வரும்போது அவரவரின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்றும் எச்சரிக்கை தருகின்றனர் வர்த்தக நிபுணர்கள்.