தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி: ஒரே நாளில் 2வது முறையாக சரிவு..!!

சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூலை 8-ம்தேதி) ஒரே நாளில் 2-வது முறையாக அதிரடியாகக் குறைந்துள்ளது.
தங்கம் விலை
Gold Price
Updated on

சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூலை 8-ம்தேதி) ஒரே நாளில் 2-வது முறையாக அதிரடியாகக் குறைந்துள்ளது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், மாலை நேர நிலவரப்படி மீண்டும் ரூ.1,040 குறைந்து பெண்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 5-ந்தேதி வரை ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும், இன்றும் தங்கம் விலை குறைந்தது.

அதனை தொடர்ந்து இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560-ம், கிராமுக்கு ரூ.70-ம் குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,640-க்கும், ஒரு கிராம் ரூ.13,330-க்கமு் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று மாலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது இன்று காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், மாலை நேர நிலவரப்படி மீண்டும் ரூ.1,040 குறைந்து பெண்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதன் மூலம், இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தமாக சவரனுக்கு ரூ.1,600 வரை விலை சரிந்துள்ளது.

மாலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் நீடிக்கிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.245க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் இதேநாளில் (ஜூன் 8-ம்தேதி)22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.14,070-க்கும் மற்றும் ஒரு சவரன் ரூ.1,12,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,070 இருந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.13,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம்
Gold Price

அப்படி பார்த்தால் கடந்த ஜூன் மாதத்தை விட ஜூலை மாதம் அதேநாளில் ஒரு கிராம் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.870 குறைந்துள்ளது. ஒரு சவனுக்கு சுமார் ரூ. 6,960 வரை குறைந்துள்ளது.

அதேபோல, கடந்த ஜூன் மாதம் இதேநாளில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.270 ஆகவும், ஒரு கிலோ ரூ.2,70,000 ஆகவும் இருந்த நிலையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.245க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்துடன் கணக்கிடும் போது இந்த மாதம் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.25 வரையும், ஒரு கிலோ ரூ.25000 வரையும் குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஷாக்.. 2 நாட்களில் ரூ.3,600 உயர்வு.. உச்சத்தை நோக்கி தங்கம் விலை..!
தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருவது நகை பிரியர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.இந்தச் சரிவானது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆபரணங்கள் வாங்க அல்லது முதலீட்டுக்காக தங்கம் வாங்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம்.

மீண்டும் போர் பதற்றம் எதிரெலியால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் காரணமாகவே இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.. ரூ.10,000 சரிவு.. காலையிலேயே குறைந்த தங்கம், வெள்ளி விலை.!
தங்கம் விலை

அதனை தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தையும் இன்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com