ஷாக்.. 2 நாட்களில் ரூ.3,600 உயர்வு.. உச்சத்தை நோக்கி தங்கம் விலை..!

தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக காலையில் குறைந்து, மாலையில் ஏறியது. ஆனால் நேற்று (ஜூலை 2) மட்டும் காலை மற்றும் இரவு என இரண்டு முறையும் ரூ.2,400 வரை தங்கத்தின் விலை உயர்ந்தது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை அளித்தது.

பொருளாதார நிபுணர்கள் பலர் தங்கத்தின் விலை உயரும் என கணித்திருந்த நிலையில், தற்போது தான் தங்கத்தின் விலை ஏறுமுகத்தை சந்தித்து வருகிறது. தங்கத்தை ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

நேற்று (ஜூலை 02) தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்த நிலையில், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்தது.

இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,08,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,550-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,55,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 03) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1200 உயர்ந்து, ரூ.1,09,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.13,700-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.260-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இதே ஜூலை 3-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,840-க்கும், 1 கிராம் ரூ.9,105-க்கும் விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், ஓராண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட பாதியளவு உயர்ந்திருப்பதை உணர முடிகிறது.

2025 ஜூலை 3-ல் 1 கிராம் வெள்ளி ரூ.121-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஓராண்டில் வெள்ளியின் விலை இருமடங்காக அதிகரித்திருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

Gold & Silver Price
Gold & Silver
இதையும் படியுங்கள்:
#BREAKING: பொய் சொன்னால் ரூ.5 லட்சம் அபராதம்! ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி.!
தங்கம் விலை

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 02: 1 கிராம் - ரூ.13,550 1 சவரன் ரூ.1,08,400

ஜூலை 01: 1 கிராம் - ரூ.13,250 1 சவரன் ரூ.1,06,000

ஜூன் 30: 1 கிராம் - ரூ.13,200 1 சவரன் ரூ.1,05,600

ஜூன் 29: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400

ஜூன் 28: 1 கிராம் - ரூ.13,370 1 சவரன் ரூ.1,06,960

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 01: 1 கிராம் - ரூ.255

ஜூலை 01: 1 கிராம் - ரூ.245

ஜூன் 30: 1 கிராம் - ரூ.245

ஜூன் 29: 1 கிராம் - ரூ.245

ஜூன் 28: 1 கிராம் - ரூ.245

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் தற்போதைய சூழலில், இதில் முதலீடு செய்வது நல்ல யுக்தியாகும். குறுகிய காலத்தில் அதிக லாபத்தைக் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் நல்ல லாபத்தை ஈட்டித் தரும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படியுங்கள்:
ஆதார் பயனர்களுக்கு குட் நியூஸ்: இனி 6 மாதத்திற்கு கட்டணமே கிடையாது!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.