

தங்கத்தின் மதிப்பானது கூடிக் கொண்டே போகிறது. இது குறைந்த அளவில் தங்கம் வாங்குவோருக்கு கவலையளிப்பதாகவே உள்ளது. ஆனால் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டும் என நிபுணர்கள் கணித்திருந்தனர். அந்த கணிப்பை உறுதிப்படுத்துவது போன்றே கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதியே அதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் புதிய உச்சமாக சவரன் ரூ.1,04,800-ஐ தொட்டது.
2025 ஆம் ஆண்டை போலவே 2026 ஆம் ஆண்டும் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி ஒரு சவரன் விரைவில் ரூ.2 லட்சத்தை தொட வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
வாரத்தின் முதல் நாளான நேற்று (பிப்.2) சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 950 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்பட்டது.சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ரூ. 80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி,இன்று ரூ. 640 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்துள்ளது.ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,920 உயர்ந்து, சவரன் ரூ.1,14,160க்கு விற்பனை.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்தது!
வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.20 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது