அரை லட்சத்தை தொடும் தங்கம்... மீண்டும் புதிய உச்சம்!

Gold Price
Gold Price

பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் சேமிப்புக்காகவும், தங்களை அழகுப்படுத்திக் கொள்ளவும் தங்க நகைகளையே அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், சமீப காலமாக தங்கத்தின் விலை தாறுமாறாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது.

கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தொடர்ந்து அதன் விலை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பவுன் ₹ 47,000 இருந்த நிலையை கடந்து பின்னரும் அதிகரித்தபடியே வந்து கடந்த 5ம் தேதி ஒரு பவுன் ₹ 48,000 தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன் தொடர்ச்சியாக தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வந்து தினமும் ஏறுமுகமாகவே இருப்பதைக் கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி சிறிது விலை குறைந்தாலும் அதன் பிறகான தங்கம் நிலையில் ஏற்ற இறக்கம் நீடித்தே வருகிறது. இந்த நிலையில் நேற்று (21-03-2024) மீண்டும் தங்கம் விலை கிடு கிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் (20-03-2024) ஒரு கிராம் ₹ 6,140க்கும் ஒரு பவுன் ₹ 49,120க்கும் விற்பனையானது. நேற்று மாலை  நிலவரப்படி கிராமுக்கு ₹ 95 பவுனுக்கு ₹760 உயர்ந்து ஒரு கிராம் ₹ 6,235 க்கும் ஒரு பவுன் ₹ 49,880க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. இன்று ரீடெயில் சந்தையில் 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 6,200 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 6,764 (1 கிராம்) ஆகவும் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
சுருக்குப்பை செய்திகள் (22.03.2024)
Gold Price

அந்த வகையில் ஒரு பவுன் தங்கம் ₹ 50,000 நெருங்கி இருக்கிறது.  தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதுமா தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என்றும் பெரும்பாலும் உயர்ந்தே காணப்படும் எனும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரை லட்சத்தை தொடும் தங்கத்தின் விலையைக் கட்டுப்படுத்தி தங்கள் சேமிப்புக்கு அரசு உதவுமா என்பதே தற்போது நடுத்தர வகுப்பு சார்ந்த  தங்கப் பிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com