வடபழனி முருகன் கோயிலில் இன்று இந்த தங்கத் தேர் பவனியை அறிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். அவருடன்வடபழநி ஆண்டவர் கோயில் தக்கார் எல். ஆதிமூலம், தி.மு.க., எம்.எல்.ஏ., வேலு, அறநிலையத் துறை இணை கமிஷனர் தனபாலன், துணை கமிஷனர் முல்லை உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து கோயிலை சுற்றி வந்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இந்த நிதியாண்டில் புதிய தேர்கள் உருவாக்கவும் பழைய தேர்களை சீரமைக்கவும் ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிதியாண்டில் 9 புதிய தேர்கள் செய்யவும் 4 பழைய தேர்கள் பழுது நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிக்காகவும் காசி யாத்திரைக்காகவும் ரூ. 50 லட்சத்தை அரசு ஒதுக்கியுள்ளது. கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வடபழனி ஆண்டவர் கோவிலில் தங்க தேர் பவனி நடக்கவில்லை.
பக்தர்களின் வேண்டு கோளை ஏற்று தேர் புதுப்பிக்கும் பணி முடிந்து தேர் பவனி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.