அஸ்ஸாம் மாநில காவல் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநில காவல் துறையில் பணியாற்றும் நபர்களில் சுமார் 300 பேர் அதிகளவு மது பழக்கம் உள்ளவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாஅஸ்ஸாம் மாநில காவல் துறையில் பணியாற்றுபவர்களில் சுமார் 300 பேர் அதிகளவு மதுபோதைக்கு அடிமையாகி உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர்களின் உடல் நலன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதுபோல் காவல் துறையில் பணியாற்றிக்கொண்டு அளவுக்கு மீறிய மது பழக்கம் உள்ள 300 போலீஸ்கரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மதுபழக்கம் உள்ள 300 போலீஸ்காரர்களை விருப்ப ஓய்வுத் திட்டம் மூலம் வீட்டுக்கு அனுப்புகிறோம் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, " அளவுக்கு மீறிய குடிபழக்கம் உள்ள போலீஸ்காரர்களை வைத்துக் கொண்டு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதும் குற்ற நடவடிக்கைகளைத் தடுப்பதும், குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதும் சாத்தியமில்லை. எனவே, இதுபோன்ற குடிகார போலீஸ்காரர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்த இடங்களுக்கு உடல் ஆரோக்கியம் கொண்ட இளைஞர்களை நியமிக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது ” என அவர் தெரிவித்துள்ளார்.