இனி கூகுள் மேப்ஸ் கிட்ட பேசலாம்..! – சுந்தர் பிச்சை அறிமுகம் செய்த புதிய மேஜிக்..!

Ask maps feature
Ask maps featureimage source: IT VOICE
Published on

அறிவியல் கண்டுபிடிப்புகளின் ராஜாவான கூகுள் சேவைகளின் தேவைகள், நமது வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டன.. தற்போது பக்கத்து தெருவிற்கு செல்வதென்றாலும் கூகுள் மேப் போட்டுத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. அதிலும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அனைத்திலும் இடம் பிடித்து வரும் நிலையில் தற்போது கூகுள் வரைபட சேவையிலும் ஜெமினி ஏஐ திறன் பயன்படுத்தி புதிய வசதிகள் (features) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது Google Maps-ஐ ஒரு சாதாரண நெவிகேஷன் ஆப்பாக மட்டுமல்லாமல் AI உதவியாளராக மாற்றும் நோக்கத்துடன் வந்துள்ள இது Google Maps-ஐ ஒரு “AI travel assistant” போல மாற்றுகிறது எனலாம்.

Google Maps மூலம் இடங்களை கண்டறிவதிலும், வழிகாட்டுதலை பெறுவதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஜெமினி திறன் கொண்ட மேம்பாடுகளை அறிமுகம் செய்துள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.சுந்தர் பிச்சை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஜெமினி ஏஐ மூலம் என்னென்ன மாற்றங்கள்?

இதன் மூலம் எந்தவொரு கேள்வியைக் கேட்டு பதில் பெறலாம் .AI உரையாடல் தேடல் (Ask Maps) மூலம் பயனர் இயல்பான மொழியில் கேள்விகளைக் கேட்கலாம் .உதாரணமாக

“குடும்பத்துடன் சென்று உணவருந்த நல்ல ரெஸ்டாரண்ட்?” “ “போக்குவரத்து நெரிசல் (Traffic) குறைவான ரூட் எது?” போன்றவைகள். AI உங்கள் தனிப்பட்ட விருப்பங்களை வைத்து அதற்கேற்ப பரிந்துரைகள் தரும்.

இம்மர்சிவ் நேவிகேஷன் (Immersive Navigation - 3D பார்வை):

3D காட்சிகள் மூலம் இது வழிகாட்டும். லேன் வழிகாட்டுதல் (Lane guidance), அடையாள மைல்கல் ஹைலைட்டிங் (Landmark highlighting) மற்றும் நிகழ்நேர சாலை நிலவரங்களை (Real-time road updates) தத்ரூபமான காட்சிகளோடு வழங்கும்.

தெளிவான தகவல்கள்:

கூகுள் வரைபட சேவையில் உள்ள விமர்சனங்கள், புகைப்படங்கள், திறந்திருந்திருக்கும் நேரம் உள்ளிட்ட தகவல்களில் இருந்து தேவையான விவரத்தை இந்த அம்சம் திரட்டித்தரும். இதன் பின்னே உள்ள ஜென் ஏஐ நுட்பம், வெறும் இணைப்புகளை மட்டும் சுட்டிக்காட்டாமல் தெளிவான பதிலை அளிக்க முயலும். பல தகவல்களை திரட்டி ஒரே பதிலாக அளிக்கும்.

இதனால் driving செய்யும்போது குழப்பம் குறையும். 500 feet” என்று சொல்லாமல்

“அந்த petrol bunk பின் right” என்று landmark மூலம் direction காட்டும்.இதனால் easy navigation கிடைக்கும். முக்கியமாக

Driving செய்யும்போது voice மூலம்:

Nearby hotel தேடலாம். Traffic report செய்யலாம். ETA share செய்யலாம் என பலவித வசதிகளைத் தருகிறது.

  • AI Recommendations (Smart suggestions)

  • AI மூலம் கூட்டம் குறைவான coffee shops,

  • EV charging stations ,Parking வசதி

போன்ற தகவல்கள் கிடைக்கும். இதனால் குழப்பம் அடையாமல் நேரத்தை மீதம் செய்யலாம்.

Google Maps-ல் Ask Maps (Gemini AI) feature பயன்படுத்துவது எப்படி?

  • ஆப்பை அப்டேட் செய்யவும்: முதலில் உங்கள் கூகுள் மேப்ஸ் ஆப்பை பிளே ஸ்டோரில் (Play Store) அப்டேட் செய்யவும்.

  • AI ஆப்ஷனைத் திறக்கவும்: ஆப்பைத் திறந்ததும் தேடல் கட்டத்திற்கு (Search Bar) அருகில் ஜெமினி ஐகான் (Gemini Icon) அல்லது 'Ask Maps' ஆப்ஷன் இருக்கும்.

  • கேள்வி கேட்கவும்: அதைக் கிளிக் செய்து உங்கள் கேள்வியைத் தட்டச்சு செய்தோ அல்லது குரல் (Voice) மூலமாகவோ கேட்கலாம்.

நிபுணர்கள் கருத்து:

சாலையில் பயனாளிகள் காணக்கூடிய காட்சிகளுக்கு ஏற்ப இருக்கும் வகையில் ஸ்டீரிட் வியூ மற்றும் வான்வழி காட்சிகளை அலசி ஆராய்ந்து இந்த அம்சம் செயல்படுவதாக கூகுள் தெரிவிக்கிறது. சந்திப்புகள், கட்டிடங்களை காண்பிக்கிறது. சாலை வழிகாட்டுதல்கள், போக்குவரத்து விளக்குகள் போன்றவற்றை முன்னதாகவே அடையாளம் காட்டி வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகள் சிக்கலான சூழலை புரிந்து கொள்ள உதவுகிறது. 'சிக்கலான சூழலை எதிர்கொள்ள மற்றும் முக்கிய கட்டிடங்கள் சார்ந்த வழிகளை கையாள இந்த அம்சம் உதவும்’ என்கின்றனர் நிபுணர்கள்.

இனி என்ன? ஹோட்டல் எங்கே இருக்கிறது, என்ன சாப்பிடலாம் என்பது போன்ற அனைத்து விவரங்களையும் உங்கள் விரல் நுனியில் சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாம். நீங்களும் இன்றே இந்த ஏஐ உதவியாளரை முயற்சி செய்து பாருங்கள்!

இதையும் படியுங்கள்:
சிலிண்டர் முன்பதிவு செய்தும் டெலிவரி கிடைக்கலையா? உடனே இந்த நம்பர்ல புகார் பண்ணுங்க..!
Ask maps feature

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com