கூகுள் மீட் என்பது மிகவும் பாப்புலரான ஆடியோ மற்றும் வீடியோ கால் சேவை.இதில் ஒரே நேரத்தில் அதிக படியான மக்கள் இனைய முடியும் என்பதால் கூகுள் மீட் பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில்,கூகுள் மீட் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, டெஸ்க்டாப் பயனர்கள் ஆன்லைன் கூட்டங்களில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு Cloudflare சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தக் கோளாறு காரணமாக, இன்று காலை முதலே பல பயனர்கள் தங்கள் ஆன்லைன் மீட்டிங்குகளில் சேர முடியாமல் சிக்கலில் மாட்டினர். இதற்குக் காரணம், கூகுள் மீட் சேவையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பப் பிரச்சனை ஆகும். டெஸ்க்டாப் மூலம் இணையத்தைப் பயன்படுத்தியவர்களிடையே இந்தப் பாதிப்பு குறிப்பாக அதிகமாக இருந்தது.
கடந்த வாரம் Cloudflare சேவையில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.கடந்த ஒரு மாதமாக AWS, Oracle, Google உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சேவை தடங்கலை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
பல பயனர்கள் சேவையின் இடையூறு குறித்து தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்த மாதம் ஒவ்வொரு பெரிய தொழில்நுட்பமும் ஏன் செயலிழந்து போகிறது?" என்று கேட்டு இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழுமா என்று கேள்வி எழுப்பினர்.