நாம் இதுவரை கூகுல் பேவில் எந்த கட்டணமும் இன்றி பணம் பரிமாறிக்கொண்டிருந்தோம். ஆனால், இனி இது சேவை கட்டண ஆப்பாக மாறப்போகிறது.
இப்போது உலகமே டிஜிட்டல் மையமாகி வருகிறது. ஒரு போன் இருந்தால் போதும், ஆன்லைனிலேயே பணம் பரிவர்த்தனை செய்துக்கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களது பேன்க் விவரங்களை போன் ஆப்பில் கனக்ட் செய்து பரிவர்தனை செய்துக்கொள்ளலாம்.
அனைத்து கடைகளிலும் ஸ்கேன் வசதிகள் வந்துவிட்டன. அதேபோல், மெட்ரோ, பேருந்து போன்ற இடங்களிலும் அந்த வசதிகள் வந்துவிட்டன. விரைவாக தமிழ்நாட்டிலும் பேருந்துகளில் ஸ்கேனர் வந்துவிடும். அந்த அளவிற்கு அன்றாட வாழ்வில் ஆன்லைன் பேமென்ட் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது.
இப்படி பணம் பரிமாறிக்கொள்வதில் குறிப்பிட்ட சில ஆப்கள் இந்தியாவிலும், இந்தியாவை விட்டு தாண்டினால் வேறு சில ஆப்களும் உதவியாக இருக்கின்றன. குறிப்பாக ஜி பே, பேடிஎம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், இதுவரை இந்த ஆப்களில் பணம் பரிமாற எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை. அதாவது சப்ஸ்க்ரிப்ஷன் போல எதுவுமே இல்லை.
இலவசமாக பதிவிறக்கம் செய்து பேன்க் அக்கௌன்ட் வைத்துக்கொள்ளும் யார் வேண்டுமென்றாலும் பணம் பரிமாறிக்கொள்ளலாம்.
ஆனால், இப்போது சில வசதிகளுக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏனெனில், எந்த கட்டணமும் இன்றி இந்த ஆப்கள் செயல்படுவதால், அந்த நிறுவணங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறதாம்.
அந்தவகையில் கூகுள் பே நிறுவனமானது தன்னுடைய சேவை கட்டணத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் google pay மூலமாக நாம் செலுத்தக்கூடிய கட்டணங்களுக்கு 0.5% முதல் 1% வரை சேவை கட்டணம் மற்றும் அவற்றிற்கான ஜி எஸ் டி சேர்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சேவை கட்டணம் ஆனது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இரண்டிற்கும் பொருந்தும் என்றும், உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய கிரெடிட் கார்டு மூலம் மின்சார கட்டணத்தை செலுத்தும் பொழுது 15 ரூபாய் வரை சேவை கட்டணமாக பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலவசமாக இருந்ததால்தான் நடுத்தர மக்கள் ஆன்லைனில் பே செய்தார்கள். இப்போது மீண்டும் நேராகவே சென்று பணம் செலுத்திக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.