Job vaccancy
Job vaccancy

ரூ.48,000 சம்பளத்தில் அரசு வங்கி வேலை! ஒரு டிகிரி போதும்!

Published on

மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில் நாடு முழுவதும் 750 காலியிடங்கள் உள்ளன. இந்த வங்கி தனது கிளைகளில் உள்ளூர் வங்கி அதிகாரிகளை (Local Bank Officer) தேர்ந்தெடுக்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. தமிழ்நாட்டிலும் காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணி மற்றும் காலியிடங்கள்

  • பதவியின் பெயர்: உள்ளூர் வங்கி அதிகாரி (JMGS I)

  • மொத்த காலியிடங்கள்: 750

  • பணியிடங்கள் உள்ள மாநிலங்கள்: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் அசாம்.

சம்பளம் மற்றும் சலுகைகள்

தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கு முதலில் அடிப்படை சம்பளம் ரூ.48,480 ஆகும். மூன்று ஊதிய உயர்வுகள் சேர்க்கப்பட்ட பிறகு, சம்பளம் ரூ.56,480 ஆக உயரும். இது தவிர, வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி மற்றும் பிற சலுகைகளுடன் சேர்த்து, மொத்த சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை ஆகும்.

தேவையான தகுதிகள்

  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தப் பிரிவிலும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

  • வயது வரம்பு: 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • மொழித் திறன்: விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியான தமிழில் சரளமாக பேச, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 10 அல்லது 12-ம் வகுப்பில் தமிழ் படித்தவர்களுக்கு மொழித் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் மனைவிக்கு நீங்கள் கொடுக்கும் இடம் எது? ராணியா அல்லது பணிப்பெண்ணா?
Job vaccancy

தேர்வு முறை

தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்:

1.  எழுத்துத் தேர்வு (120 மதிப்பெண்கள்): 2 மணி நேரம் இந்தத் தேர்வு நடைபெறும். ஆங்கிலம், வங்கி சேவை, பொது அறிவு/பொருளாதாரம் மற்றும் கணினி திறன் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

2.  நேர்காணல் (50 மதிப்பெண்கள்): எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

3.  இறுதித் தேர்வு: எழுத்துத் தேர்வின் மதிப்பெண்களில் 70% மற்றும் நேர்காணலின் மதிப்பெண்களில் 30% அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

  • இந்த வேலைக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

  • விண்ணப்பத் தேதிகள்: ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 4 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

  • விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.850 + ஜிஎஸ்டி, மற்ற பிரிவினருக்கு ரூ.100 + ஜிஎஸ்டி.

வங்கி துறையில் நிலையான வேலையைத் தேடும் பட்டதாரிகள், punjabandsindbank.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழு விவரங்களையும் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com