பாரத ரத்னா விருது நான் வாழ்நாள் முழுவதும் பின்பற்றிய கொள்கைக்கு கிடைத்த கவுரவம்!எல்.கே.அத்வானி நெகிழ்ச்சி

L K Advani
L K Advani

பாரத ரத்னா விருது தனக்கு மட்டுமல்ல தான் வாழ்நாள் முழுவதும் பின்பற்றிய கொள்கைக்கும் கிடைத்த கவுரம் என்று எல்.கே.அத்வானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே அத்வானிக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவித்துள்ளார். பாரத ரத்னா விருது தனக்கு அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள எல்.கே.அத்வானி, “இன்று எனக்கு வழங்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருதை மிகுந்த பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.

இது ஒரு நபராக எனக்குக் கிடைத்த கவுரவம் மட்டுமல்ல, நான் எந்தக் கொள்கைக்காகவும், லட்சியங்களுக்காகவும் எனது வாழ்நாள் முழுவதும் என்னால் முடிந்தவரை சேவை செய்தேனோ, அந்தக் கொள்கைகளுக்கும் லட்சியங்களுக்குமான கவுரவமாகவும் இதனைக் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஓ.பன்னீர்செல்வம் எங்கள் கட்சிக்காரர், குடும்பத்தில் ஒருவர்..சசிகலா!
L K Advani

இந்த கருத்தினை அவரின் மகள் பிரதிபா அத்வானி செய்தியாளர்களிடம் பகிர்ந்துக்கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com