ஓ.பன்னீர்செல்வம் எங்கள் கட்சிக்காரர், குடும்பத்தில் ஒருவர்..சசிகலா!

OPS - SASIKALA
OPS - SASIKALA

மிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 55வது நினைவு நாளான இன்று,  அவரின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர். இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும்-ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவும் அடுத்தடுத்து அஞ்சலி செலுத்த வந்திருந்தபோது முதல் முறையாக பொதுவெளியில் நேரில் சந்தித்துக்கொண்டனர்.

அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்திருந்த ஓ.பன்னீர்செல்வமும், வைத்தியலிங்கமும் சசிகலாவிடம் நலம் விசாரித்தனர். சில நொடிகளே இந்த சந்திப்பு நடந்தது. சில நொடிகளே இந்த சந்திப்பு இருந்தபோதிலும் இரு தரப்பு தொண்டர்களும் , சசிகலாவுக்கு ஆதரவாகவும், ஓ.பி.எஸுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா செய்தியாளர்களிடம் பேசுகையில்,” நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று என கூறினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றாக இணைய வாய்ப்புள்ளது. அதனை பொருத்திருந்து பாருங்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் எங்கள் கட்சிகாரர், அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்றவர்” என செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இதையும் படியுங்கள்:
கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் எவை தெரியுமா?
OPS - SASIKALA

அதேபோல், இந்த சந்திப்பு குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அண்ணாவுக்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும்போது, மான்புமிகு சின்னம்மாவை சந்திக்க நேரிட்டது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் நல்லதே நினைத்து நல்லதே செய்வார்கள். அதிமுக கட்சி இணையவேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com