அரசு உதவித்தொகைனு மெசேஜ் வந்திருக்கா? தொட்டு கூட பார்க்காதீங்க... உங்க பேங்க் பேலன்ஸ் காலி ஆயிடும்!

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடிAI Image
Updated on

தொழில்நுட்ப வளர்ச்சி கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கி இருந்தாலும், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிது புதிதாக மோசடி செயல்களும் அரங்கேறி வருகின்றன.

சமீப காலமாக இந்தியாவில் சைபர் கிரைம் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மாவட்ட மற்றும் நகர சைபர் க்ரைம் போலீசில் தினமும் ஏராளமான புகார்கள் குவிகின்றன. முதியோர் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டோரை குறி வைத்து தான் அதிகளவில் இந்த மோசடி நடக்கிறது.

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் 'ஹாட்ஸ்பாட்' பட்டியலில் தமிழகம் 7-வது இடத்திலும், சைபர் மோசடிகளால் அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களில் 4-வது இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே புதுவிதமான முறையில் அரசு நலத்திட்டங்களின் பெயரில் பொதுமக்களை ஏமாற்றி பணத்தைப் பறிக்கும் சைபர் மோசடிகள் சமீபகாலமாக இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருகின்றன. மோசடி கும்பல்கள் அரசின் போலி இணையதளங்கள், குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பொதுமக்களின் வங்கி விவரங்களைப் பெற்று அவர்களின் பணத்தைத் திருடுகின்றனர்.

அதாவது, அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து போன் கால் அல்லது ஆன்லைன் மூலமாக பெண்களுக்கு உதவித்தொகை, பிஎம் யோஜனா நிதி, வரி திரும்ப பெறுதல், தையல் மிஷினுக்கு மானியம் போன்ற திட்டங்கள் கீழ் நிதி உதவி தருவதாக மோசடி நடந்து வருகிறது.

மோசடிக்காரர்கள் இந்த திட்டங்கள் கீழ் பணம் அனுப்ப நம்முடைய வங்கி விவரங்களை கேட்பார்கள். பிறகு இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற என்ஓசி சார்ஜ் ஆக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டும் என்று சொல்லி உங்களை பணம் அனுப்ப சொல்வார்கள். நீங்க பணம் அனுப்பியதும் மோசடிக்காரர்கள் தொடர்பை துண்டித்துவிட்டு தப்பித்து விடுவார்கள்.

இது மட்டுமில்லாமல் நம்முடைய போனுக்கு Tax Refund இருப்பதாக மெசேஜ் அனுப்புவார்கள். அதில் உள்ள லிங்க்கை தொட்டு உள்ளே போய் Tax Refundக்காக நாம் வங்கி விவரங்களை கொடுத்ததும், அதன் மூலமாக நம்முடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவார்கள். சமீபகாலமாக இதுபோன்ற அரசு திட்ட மோசடிகள் நிறைய நடந்து கொண்டு வருகிறது.

மத்திய அரசின் தேசிய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) அமைப்பின் கீழ் இயங்கும் நிதி மோசடி மேலாண்மை அமைப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 32.80 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் பெருமளவிலான மோசடிகள் ஏழை எளிய மக்களை குறிவைத்து, இலவசங்கள் மற்றும் அரசு மானியங்களை வழங்குவதாகக் கூறி அரங்கேற்றப்படுகின்றன.

மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 9.42 லட்சத்திற்கும் அதிகமான சிம் (SIM) கார்டுகளும், 2.77 லட்சத்திற்கும் அதிகமான போலி இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

மோசடி நடக்கும் விதம் (Modus Operandi)

* இலவச நிதியுதவி அல்லது மானியம் தருவதாகக் கூறி வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் போலி லிங்குகளை அனுப்புதல்.

ஆன்லைன் மோசடி|சைபர் மோசடி
ஆன்லைன் மோசடி|சைபர் மோசடிAI Image

அதாவது, வாட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்திகளில் (SMS) "இலவச தையல் இயந்திரம்", "மகளிர் உதவித்தொகை" போன்ற கவர்ச்சிகரமான போலி இணைப்புகளை (Phishing Links) அனுப்பி தனிநபர் விவரங்களை திருடுகின்றனர்.

* ஓய்வூதியம் மற்றும் அரசு உதவித்தொகை பெறும் முதியவர்களை குறிவைத்து ஓடிபி (OTP) எண்களைப் பெறுதல்.

* அரசு கடன்களை எளிதாகப் பெறலாம் எனக் கூறி, கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லாத பிற தளங்களில் இருந்து போலி செயலிகளை (Fraudulent Apps)பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர்.

* அரசு மானியம் அல்லது கடன் ஒப்புதலாகிவிட்டது எனக் கூறி, அதை உங்கள் கணக்கிற்கு மாற்ற 'செயலாக்கக் கட்டணம்' (Processing fee) என்ற பெயரில் முன்பணம் (Processing Fees)பெறுகின்றனர்.

* சிபிஐ (CBI), அமலாக்கத்துறை (ED) அல்லது அரசு அதிகாரிகள் போல நடித்து, வங்கி கணக்கு முடக்கப்படும் என மிரட்டுதல்.

* சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாகக் கூறி வீடியோ காலில் 'டிஜிட்டல் கைது' மிரட்டல் விடுத்தல்.

இதையும் படியுங்கள்:
சேலம் சைபர் கிரைமில் குவியும் ஆன்லைன் மோசடி புகார்கள்!
ஆன்லைன் மோசடி

அதாவது உங்களது ஆதார் எண் அல்லது வங்கி கணக்கு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) என்று கூறி, சிபிஐ (CBI) அல்லது அமலாக்கத்துறை (ED) போல மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

* எந்தவொரு அரசு திட்டத்திற்கும் முன்பணம் அல்லது 'டெபாசிட்' செலுத்தத் தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* எந்த ஒரு நிதி உதவி தருவதாக வரும் சலுகைகள் சார்ந்த செய்திகளை அதிகாரப்பூர்வமாக அரசு வலைத்தளங்கள் அல்லது உள்ளூர் அதிகாரிகளை தொடர்ப்பு கொண்டு சரி பார்க்க வேண்டும்.

* உங்கள் வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் பின் (PIN) மற்றும் ஓடிபி (OTP) எண்களை யாருடனும் பகிர வேண்டாம்.

* தொலைபேசி மூலமாகவோ, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ வங்கி விவரங்களை கேட்கப்பட்டால் எப்போதும் பகிரக்கூடாது.

* மோசடிக்காரர்கள் பொதுவாக அவசர நிலையை உருவாகி உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை வழங்க அழுத்தம் கொடுப்பார்கள். அந்த அழுத்தத்தை நம்பி விடாமல் கவனமாக சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

* எந்த ஒரு அரசு திட்டத்தின் கீழ் நாம் பணம் வாங்கவோ, பணம் செலுத்தவோ வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படியுங்கள்:
புதுவிதமான சைபர் மோசடி... ஜாக்கிரதை மக்களே!
ஆன்லைன் மோசடி

அறியப்படாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால்களை ஏற்க வேண்டாம்.

சைபர் புகார்களைப் பதிவு செய்ய :

நீங்கள் சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டால் உடனடியாகப் பின்வரும் வழிகளில் புகார் அளிக்கலாம்.

தமிழகத்தில் சைபர் நிதி மோசடிகளில் இழந்த பணத்தை விரைந்து மீட்க அவசர நடவடிக்கையாக e-Zero FIR முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகை அச்சுறுத்தும் 'சைலண்ட் கால்' மோசடி: சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை..!
ஆன்லைன் மோசடி

தொலைபேசி மூலமாக வரும் அரசு அலுவலகம் அல்லது வங்கி சார்ந்த அழைப்புகளை நம்ப வேண்டாம். இதுபோன்ற மோசடிகளால் நீங்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 தொடர்பு கொண்டே அல்லது http://www.cybercrime.gov.on என்ற இணையதளத்திலோ உங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com