இன்டிகா (INDICA) என்பது 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு ஹைதராபாத்தை தலைமைக் கழகமாக கொண்டுள்ள ஒரு நிறுவனம். இது இந்திய பாரம்பரிய அறிவியல் முறைகள், கலாசாரம் மற்றும் மரபுகளை வளர்த்து பரப்பும் நோக்குடன் செயல்படுகிறது.
இன்டிகாவின் இலக்கு — அனைவரின் நலனுக்காக இந்திய ஞானத்தை நவீன வாழ்க்கையில் பயன்படுத்துவதும், மாற்றத்தை உருவாக்கும் நபர்களை (ஆசிரியர்கள், நிபுணர்கள், மாணவர்கள், மற்றும் மூத்தவர்கள்) ஊக்குவிப்பதும் ஆகும்.
இது பாடநூல், நடைமுறை மற்றும் அனுபவம் சார்ந்த அறிவியல் முறைகளை இணைத்து குருகுலம் மற்றும் பல்கலைக்கழகம், நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள், இந்திய மற்றும் உலக ஞான முறைகள் இடையே பாலமாக செயல்படுகிறது.
இன்டிகா பாடநெறிகள், வேலைப்பாடுகள், தஞ்சமடைவுகள், மாநாடுகள், விழாக்கள் போன்றவையும் வழங்கி, ஆசிரியர்களை குருக்களாகவும், மாணவர்களை கலாசார மாற்ற தூண்டில்களாகவும் உருவாக்குகிறது.
இன்டிகா நிறுவனம் இந்திய அறிவுசார் அமைப்பு, கலாச்சார மரபுகளை நிலை நிறுத்துவதற்கும், பரப்புவதற்கும் 'Grateful2Gurus' நிகழ்வினை, 10 வருடங்களுக்கு முன்பு குரு பூர்ணிமா அன்று ஆரம்பித்து, முன் மாதிரியாக செயல்படுகிறது.
குருக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் இண்டிகா, 'Grateful2 Gurus' என்கிற நிகழ்வினை, குரு பூர்ணிமா தினத்தன்று சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, இவ்விழா இன்று சென்னையில் வைத்து நடைபெறவிருக்கிறது.
எதற்காக இந்த Grateful2Gurus விழா..? எவ்வாறு கொண்டாடப்படுகிறது..?
இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளை நிலை நிறுத்த உழைத்த குருக்களை கௌரவிப்பது, அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது போன்றவை இண்டிகாவின் Grateful2Gurus விழாவின் முக்கியத்துவம் ஆகும்.
இன்டிகாவின் Grateful2Gurus மூலம் அநேக குருக்களுக்கு, சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலுள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் வைத்து பாராட்டு விழாக்கள் நடைபெறும். மேலும், குருக்களின் இல்லங்கள் மற்றும் சென்னையிலுள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகிய இடங்களிலும் சிறப்பு விழா நடைபெறும்.
இன்டிகாவின் Grateful2Gurus நிகழ்வில், குருக்களுக்கு பாரம்பரிய மற்றும் மனமார்ந்த முறையில் மரியாதை செலுத்த, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, குருக்களை பரிந்துரை செய்ய இணைய தளத்தில் பதிவு செய்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட குருக்கள் இன்டிகாவின் Grateful2Gurus நிகழ்வில், பாரம்பரிய முறையில் கௌரவிக்கப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கும் முறை:-
இந்தியா முழுவதிலும் இருக்கும் குருக்கள்,
தங்களை முழுமையாக தர்ம சேவைக்கு அர்ப்பணித்திருக்க வேண்டும்
குறைந்த பட்சம் பத்து வருடங்கள் அவர்களது தர்ம சேவை, பாதுகாப்பு பணி தொடர்ந்து இருக்க வேண்டும்.
மற்றவர்களை மோட்டிவேட் பண்ணக்கூடிய வகையில் அவர்களது சேவை, இடைவிடாமல் தொடர்ந்திருப்பது அவசியம்.
60 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
இத்தகைய குருக்களை கண்டறிந்து, Grateful2Gurus விழாவில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து ரூபாய் 11,000/- க்கு பணமுடிப்பு அளிக்கப்படுகிறது.
இதுவரை சுமார் 130 குருக்களுக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடம் டாக்டர் திருமதி பத்மா சுப்பிரமணியம், திருமதி பிரேமா ரங்கராஜன், பேராசிரியை திருமதி சுதாராணி ரகுபதி என சுமார் 11 குருக்கள், இந்தியாவின் பல்வேறு இடங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் குருக்கள் ஆகியோர்களுக்கும் இன்று மாலை சென்னையில் வைத்து மரியாதை செய்யப்படவிருக்கிறது.