#BREAKING ஐபிஎல் 2026: குஜராத் அணியை வீழ்த்தி, வெற்றி வாகை சூடியது ராஜஸ்தான்.!!

இன்று நடந்த 8-வது லீக் போட்டியில் குஜராத் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.
GT vs RR
Gujarat captain Rashid Khan, Rajasthan captain Riyan Paragimage credit-outlookindia.com
Published on

ஆமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இன்று நடைபெறும் மற்றொரு லீக் (8-வது லீக்)ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதல் தோல்வியை சரி செய்து சொந்த மண்ணில் வெற்றி கணக்கை தொடங்கும் ஆர்வத்துடன் குஜராத்தும், வெற்றியை நீட்டிக்கும் வேட்கையில் ராஜஸ்தானும் வரிந்து கட்டுவதால் இன்றைய போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக இன்று சுப்மன் கில்லுக்கு பதிலாக ரஷித் கான் செயல்படுகிறார்.

இப்போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கிய நிலையில், அதிரடியாக விளையாடி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய குஜராத் அணி, ராஜஸ்தான் அணியின் அதிரடியான பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்ட போதிலும் கடைசியில் வெறும் 6 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 2-வது வெற்றியையும், குஜராத் அணி 2-வது தோல்வியையும் பதிவு செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com