

கிண்டி சிறுவர் பூங்காவில் அடுத்தடுத்து 20 பறவைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரண்டிவாயன், கூழைக்கடா, செங்கால் உள்ளிட்ட நாரைகள், கொக்குகள் அடங்கும். பறவைக் காய்ச்சல் பரவும் அச்சம் காரணமாகப் பூங்கா தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகளை பாதுகாக்கும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இறந்த பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2024-ல் 30 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட, 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் கல்வி மையமான இந்த சிறுவர் பூங்கா கிண்டியில் அமைந்துள்ளது. கிண்டி தேசியப் பூங்கா தினசரி காலை 9 முதல் மாலை 5:30 மணி வரை இயங்குகிறது. செவ்வாய்க்கிழமை விடுமுறை. நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 60 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
கிண்டி சிறுவர் பூங்காவில் திடீரென அடுத்தடுத்து 20 பறவைகள் உயிரிழந்ததால் பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது. பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.பார்வையாளர்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்கவும், பூங்காவில் உள்ள மற்ற விலங்குகள் மற்றும் பறவைகளைப் பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பூங்கா மூடப்பட்டுள்ளது.
நாரைகள், கொக்குகள் உயிரிழந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வேடந்தாங்கலில் இருந்து இனப்பெருக்கம் செய்வதற்காக வெளிநாட்டு பறவைகளை சிறுவர் பூங்காவிற்கு கொண்டு வருவது வழக்கமாக உள்ளது. இன்று காலை முதலே சிறுவர் பூங்காவில் ஒவ்வொரு பறவையாக இறந்து வருகின்றன. கரண்டிவாயன், கொக்கு, நாரை, கூடக்காரை, செங்கால் நாரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்து போயின.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து வரக்கூடிய பார்வையாளர்களுக்கு இந்த தொற்றுப் பரவாமல் இருப்பதற்காகவும் மற்றும் இங்குள்ள மற்ற விலங்குகள், பறவைகளுக்கு பரவாமல் இருப்பதற்காகவும் பாதுகாப்பு நடவடிக்கையாக, நோய் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ளது.
சிறுவர் பூங்காவைச் சுற்றியுள்ள மரங்கள் அதிகம் காணப்படும் அடையார், மயிலாப்பூர், டி.நகர், வேளச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள பறவைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.