ஞானேஷ் குமார் 48 மணி நேரத்தில் விலக வேண்டும்: கரப்பான் பூச்சி ஜனதா எச்சரிக்கை!

வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி விவகாரத்தில் வெடித்த புதிய அரசியல் சர்ச்சை மற்றும் ராஜினாமா கோரிக்கை
CJP
Abhijit deepkeindian Express
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும் என்றும், அவ்வாறு பதவி விலக தவறினால் நாடு முழுக்க போராட்டத் தொடங்குவோம் , என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிய வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளை (SIR) ஆரம்ப காலகட்டத்தில் இருந்து , காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வந்தன. இதில் மம்தா பானர்ஜியின் திருணமுல் காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகள், இறுதிவரை மிக கடுமையாக எதிர்த்து வந்தனர்.

நடந்து முடிந்த பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல் முன்பாக SIR பணிகள் மூலம் , இறந்த மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அட்டை பெற்றவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இந்த பணிகள் தீவிரமானதை தொடர்ந்து மே.வங்கம் மற்றும் எல்லையோர மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வங்க தேசத்திற்கு திரும்பினர். அதே நேரத்தில் புதிதாக முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் பட்டியலும் சேர்க்கப்பட்டது. இந்த நடைமுறை குறிப்பிட ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய தேர்தல் ஆணையத்தால் செயல்படுத்தப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு பின்னர் , சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிகள் தோல்வியுற்றது. தமிழகம் மற்றும் கேரளாவில் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும் படுதோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் பெரிதும் சரிந்தது. கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இடைத்தேர்தலில் பாஜகவும் வெற்றிப் பெற்ற தொகுதிகளில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சிறந்த முதல்வராக குறிப்பிடப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் , மம்தா பானர்ஜி, முக.ஸ்டாலின் ஆகியோர் SIR பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் , தங்களின் சொந்த தொகுதிகள் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டமன்ற தோல்விகளுக்கு பின்னால் , மம்தா பானர்ஜியின் தி.காங்கிரஸ் கட்சியும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் பெரிய அளவில் உடைந்தது.

இந்திய தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தலைமை தேர்தல் ஆணையரின் முடிவுகள் குறித்து ஆட்சேபனை தெரிவித்தும், அவர் அதை கண்டு கொள்ளாமல் செயல்பட்டதாக கூறிய தகவல்கள் நேற்று ஊடகங்களில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியது. இன்று இந்த பிரச்சனைகளை கரப்பான் பூச்சி தனதா கட்சியினர் தங்கள் கையில் எடுத்தனர்.

CJP
Neet protest X

அந்த கட்சியின் சௌரவ் தாஸ் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்தில் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரவுள்ள அனைத்து தேர்தல்களையும் நிறுத்தி வைத்து , 2025 ஆம் ஆண்டிற்கு முன் இருந்த வாக்காளர் பட்டியலை மீண்டும் அப்படியே இணைக்க வேண்டும். SIR தொடர்பான கோப்புகளை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் ஆணையர்களின் நியமனத்தை நிர்வகிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியது.

மேலும் பாஜகவின் வாக்கு சதவீதம் பல மாநிலங்களில் அதிகரித்துள்ளது, இதற்கு தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய காரணம் என்று கரப்பான் பூச்சி கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் தொடர்பான பிரச்சனைகள் தற்போது சூடு பிடித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com