டெல்லியில் 8 மடங்கு அதிகரித்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு: மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

டெல்லியை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் பரவல்; கோவிட் மற்றும் H1N1-ஐ வேறுபடுத்தி அறிவது எப்படி?
wear mask
wear mask
Updated on

கோவிட் பெருந்தொற்றின் அச்சம் இன்னும் விலகாத நிலையில் விரைவாகப் பரவும் பன்றிக்காய்ச்சல் பற்றிய செய்திகள் மக்களிடம் மேலும் அச்சம் தருபவையாக உள்ளது.

டெல்லியில் இந்த ஆண்டு 1,777 எச்1என்1 (H1N1) பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட எட்டு மடங்கு அதிகமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டெல்லியைத் தொடர்ந்து சத்தீஸ்கரிலும் பன்றி காய்ச்சல் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் (Durg) மாவட்டத்திலும் 3 வயது சிறுமிக்கு எச்1என்1 (H1N1) பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகளின் தகவலின்படி, சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அச்சிறுமியின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் பன்றி காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு H1N1 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிறுமி தற்போது தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் நிலையில் டெல்லியில் பன்றி காய்ச்சல் பாதிப்பு 1,700-ஐ தாண்டியுள்ளதால், மக்கள் முகக்கவசம் அணிய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (NCDC) தரவுகளின்படி, டெல்லியில் H1N1 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன . கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 229 ஆக இருந்த பாதிப்புகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஆகஸ்ட் 20, 2026 வரை 1,777 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த அதிகரிப்பு, தலைநகரில் உள்ள மருத்துவமனைகளை இன்ஃப்ளூயன்ஸா மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான ஏற்பாடுகளை மேலும் வலிமையாக்க எச்சரித்துள்ளது.

மேலும், கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களிலும் சமீபத்தில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்த அதிகரிப்புகள் H1N1 இன் புதிய வகை வைரஸால் ஏற்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உறுதி செய்துள்ளதுடன், அனைவரும் பீதியடைவதைத் தவிர்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது.

தற்போதைய எச்1என்1 இன்ஃப்ளூயன்ஸாவையும் ஏற்கனவே அச்சுறுத்திய கோவிட்-19ஐயும் எப்படி வேறுபடுத்தி அறிவது என்ற கேள்வியையும் எழுப்புகிறது இந்த செய்தி.

பொதுவாக இவை இரண்டுமே வைரஸ் சுவாச நோய்த்தொற்றுகள் ஆகும். மேலும் இவை காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சோர்வு மற்றும் உடல் வலிகளை ஏற்படுத்தக்கூடும். அறிகுறிகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போவதால், ஒருவருக்கு இன்ஃப்ளூயன்ஸா அல்லது கோவிட்-19 இருக்கிறதா என்பதை அறிகுறிகளை மட்டும் கொண்டு உறுதியாக உறுதிப்படுத்த முடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.

Swine flu
Swine flu

"பன்றிக் காய்ச்சல் மற்றும் கோவிட்-19 ஆகிய இரண்டுமே காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி மற்றும் சோர்வை ஏற்படுத்தக்கூடிய சுவாச நோய்த்தொற்றுகளாகும். இதனால், அறிகுறிகளை மட்டும் வைத்து இவ்விரண்டையும் வேறுபடுத்துவது கடினமாக இருக்கலாம்," என்றும் கூறுகின்றனர். இருப்பினும், இந்த வைரஸ்கள் வேறுபட்டவை என்றும் அவற்றின் மருத்துவப் போக்கு, பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளின் சில அம்சங்களும் வேறுபடுவதாகவும் தெரிகிறது.

எனினும் சுவாசிப்பதில் சிரமம், மார்பு வலி அல்லது அழுத்தம், குழப்பம், வழக்கத்திற்கு மாறான தூக்கக் கலக்கம், தோல் நீல நிறமாக மாறுதல் அல்லது வெளிறிப்போதல், அல்லது ஆக்ஸிஜன் அளவு குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், மக்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்ஃப்ளூயன்ஸா பெரும்பாலும் திடீரெனத் தொடங்குகிறது என்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO) இந்திய இன்ஃப்ளூயன்ஸா வழிகாட்டுதலின்படி, வழக்கமான காய்ச்சல் போன்ற நோயின் அறிகுறிகளில் திடீர் காய்ச்சல், பொதுவாக வறட்டு இருமல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, கடுமையான உடல் சோர்வு, தொண்டை வலி மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை அவற்றின் அறிகுறிகள் என்பதால் அலட்சியம் வேண்டாம் உடனடியாக மருத்துவரை நாடவேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் H1N1, இன்ஃப்ளூயன்ஸா A வைரஸால் ஏற்படுகிறது. 2009 இன்ஃப்ளூயன்ஸா பெருந்தொற்றுக்குப் பிறகு H1N1 பரவலாக அறியப்பட்டது, மேலும் அது பருவகால இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களில் ஒன்றாகப் பரவி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இது புதிய வைரஸ் அல்ல என்றும், பருவகால இன்ஃப்ளூயன்சா வகையைச் சேர்ந்தது என்பதால் மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது சற்று ஆறுதலையும் அளித்துள்ளது. மேலும் தொற்று பரவாது வகையில் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை விலை கிடுகிடு உயர்வு: டீ, காபி ரூ.25 வரையும், பால்கோவா கிலோ ரூ.400 ஆகவும் உயரும் அபாயம்!
wear mask
logo
Kalki Online
kalkionline.com