ஹமாஸ் அமைப்பு தனது சொந்த வீரர்களையே சித்ரவதை செய்து கொலை செய்வதாக இஸ்ரேல் ஆய்வில் தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்படுகிறது. இந்த இரு அமைப்பையும் அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகள் தீவிரவாத அமைப்புகளாக அறிவித்தன.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதுமுதல், இஸ்ரேல் கொடூரமான பதில் தாக்குதலில் ஈடுபட்டது. அமெரிக்கா கூட போரை நிறுத்துமாறு கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டதால், தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது. தொடர்ந்து 15 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த போரினால், பாலஸ்தீன மக்கள் பஞ்சம், பட்டினி மற்றும் போர் காரணமாக சித்ரவதைகளை அனுபவித்து வந்தனர்.
இப்படியான நிலையில், ஹமாஸ் குறித்த ஒரு முக்கிய தகவலை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டனர்.
ஹமாஸ் வீரர்கள் திருமணம் இல்லாமல் வேறு ஒரு உறவில் இருந்தாலோ, இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் இருந்தாலோ, ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டாலோ ஹமாஸ் அவர்களை சித்ரவதை செய்து கொலை செய்வதாக இஸ்ரேல் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த உறவுகளில் ஈடுபட்ட வீரர்களை சித்ரவதை செய்து தூக்கிலிட்டார்களாம். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று கூறிய நிலையில், இந்த சம்பவத்தை கண்டுபிடித்து சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுவாக இந்த உறவுகளில் ஈடுபடுபவர்களுக்கு ஈரான், சவுதி போன்ற இஸ்லாமிய நாடுகளே கடுமையான தண்டனை கொடுத்து வந்தனர். அந்த வரிசையில் இப்போது ஹமாஸ் அமைப்பும் இணைந்துள்ளது.
ஆனால், ஹமாஸின் இந்த செயல்பாட்டை குறித்து இஸ்ரேல் மட்டுமே கூறியிருக்கிறதே தவிர, இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.