
எச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCL Technologies) என்பது இந்தியாவில் தலைமையிடத்தைக் கொண்ட ஒரு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இந்நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 223,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் செயல்படுகிறது, மேலும் இது உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு சேவை செய்கிறது.
இந்நிலையில் சமீபகாலமாக எச்சிஎல் நிறுவனம் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு வாய்ப்புகளை வழங்கும் பொருட்டும் அதன் சென்னை கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டும் படித்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.
இதற்கு முன்பு கடந்த 4-ம்தேதி Fresher Process Associate Banking Domain என்ற பிரிவிற்கும், கடந்த 6-ம்தேதி ஜாவா ஏடபிள்யூஎஸ் டெவலப்பர் (Java AWS Developer) பணிக்கும், 12 மற்றும் 13-ம்தேதிகளில் பேங்கிங் மற்றும் பைனான்ஸ் (Banking and Finance) பிரிவில் அசோசியேட்/ சீனியர் எக்ஸிக்கியூட்டிவ், குவாலிட்டி் அனலிஸ்ட் பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்நிறுவனம் ஜாவா டெவலப்பர் (Java Developer) பணிக்கு ஆட்கள் தேவை என்றும் விருப்பம் உள்ளவர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இன்று காலை நடைபெறும் (செப்டம்பர் 20-ம்தேதி) நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது.
வேலைக்கான தகுதிகள்
* இன்று காலை (செப்டம்பர் 20-ம்தேதி) ஜாவா டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
* ஜாவா, ஸ்பிரிங்புட், மைக்ரோ சர்வீசஸ், ஜூனிட் (Junit), ரெஸ்ட்ஃபுல் ஏபிஐ, எஸ்க்யூஎல் தெரிந்தவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
* மேலும் இந்த பிரிவில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* சோழிங்நல்லூரில் உள்ள எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இன்று நேர்முகத் தேர்வு Face to Face முறையில் நடைபெற உள்ளது.
* நேர்முகத் தேர்வில் தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அதன்பிறகு தேவையை பொறுத்து பிற இடங்களுக்கும் மாற்றப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* நேர்முகத் தேர்வில் தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
* விருப்பம் உள்ளவர்கள் இன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று எச்சிஎல் நிறுவனம் அறிவித்துள்ளது.