இன்றும், நாளையும் HCL-ல இன்டர்வியூ... தகுதி மற்றும் முழு விவரம் இதோ..!

எச்சிஎல் நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 12 மற்றும் 13-ம்தேதிகளில் நடக்கும் இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Interviews at HCL
Interviews at HCL
Published on

எச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCL Technologies) என்பது இந்தியாவில் தலைமையிடத்தைக் கொண்ட ஒரு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இது டிஜிட்டல் மாற்றம், மென்பொருள் மேம்பாடு, பொறியியல் சேவைகள், ஆலோசனை மற்றும் IT உட்கட்டமைப்பு மேலாண்மை போன்ற சேவைகளை வழங்குகிறது. இந்நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 223,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் செயல்படுகிறது, மேலும் இது உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு சேவை செய்கிறது.

இந்நிலையில் சமீபகாலமாக எச்சிஎல் நிறுவனம் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு அழைப்புகளை விடுத்து வருகிறது.

இதற்கு முன்பு கடந்த 4-ம்தேதி Fresher Process Associate Banking Domain என்ற பிரிவிற்கும், கடந்த 6-ம்தேதி ஜாவா ஏடபிள்யூஎஸ் டெவலப்பர் (Java AWS Developer) பணிக்கும் இண்டர்வியூ நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எச்சிஎல் நிறுவனம் தற்போது பேங்கிங் மற்றும் பைனான்ஸ் (Banking and Finance) பிரிவில் அசோசியேட்/ சீனியர் எக்ஸிக்கியூட்டிவ், குவாலிட்டி் அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளதாகவும், இந்த பணியில் சேர விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இன்றும்(செப்டம்பர் 12-ம்தேதி), நாளையும் (செப்டம்பர் 13-ம்தேதி) சென்னையில் நடைபெறும் இன்டர்வியூவில் பங்கேற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான தகுதி :

அந்தவகையில் இதில் அசோசியேட்/சீனியர் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டியது முக்கியம். அதேவேளையில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் Mortage Domains நாடுகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும், மேற்சொன்ன நாடுகளின் Lending Regulations பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் Onshore Clients ஆங்கிலத்தில் சரளமாக பேசிய அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குவாலிட்டி அனலிஸ்ட் பணிக்கு பைனான்ஸ், காமர்ஸ் அல்லது அதற்கு தொடர்புடைய பிரிவில் டிகிரி அல்லது பட்ட மேற்படிப்பை முடித்திருக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், எம்எஸ் எக்ஸல் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் மற்றும் இன்டர்வியூ நடைபெறும் முகவரி :

மேலும், இந்த பணிகளுக்கு கடைசி கட்ட இன்டர்வியூ முடிந்த பின்னர், பணி அனுபவம் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 4 மணி (ஆஸ்திரேலியா ஷிப்ட் டைமிங்) வரை ஷிப்ட் டைமிங் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஏதாவது ஒரு டிகிரி இருந்தால் போதும்..! இன்று மற்றும் 6-ம் தேதி இண்டர்வியூக்கு அழைக்கும் HCL..!
Interviews at HCL

விருப்பம் உள்ளவர்கள் HCL Technologies Ltd, ETA 3, No 33, Block 1, Sandhya Infocity, OMR Rajiv Gandhi Salai, Navalur, Chennai என்ற முகவரியில் இன்றும்(செப்டம்பர் 12-ம்தேதி), நாளையும் (செப்டம்பர் 13-ம்தேதி) நடைபெறும் இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com