
எச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCL Technologies) என்பது இந்தியாவில் தலைமையிடத்தைக் கொண்ட ஒரு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இது டிஜிட்டல் மாற்றம், மென்பொருள் மேம்பாடு, பொறியியல் சேவைகள், ஆலோசனை மற்றும் IT உட்கட்டமைப்பு மேலாண்மை போன்ற சேவைகளை வழங்குகிறது. இந்நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 223,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் செயல்படுகிறது, மேலும் இது உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு சேவை செய்கிறது.
இந்நிலையில் எச்சிஎல் நிறுவனம் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது சென்னையில் உள்ள இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கு, கலை மற்றும் அறிவியல் படித்த பட்டதாரிகள் தேவை என்றும் வேலைக்கு அனுபவம் தேவையில்லை என்று கூறியுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு இன்று (செப்டம்பர் 4) நடக்கும் இண்டர்வியூவில் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
இன்று நடக்கும் பணிக்கான, தகுதி, இண்டர்வியூ நடக்கும் முகவரி:
* Fresher Process Associate Banking Domain என்ற பிரிவிற்கு இன்று இண்டர்வியூ நடைபெற உள்ளது.
* இன்று (செப்டம்பர் 4) காலை 11 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது.
* முகவரி: HCL டெக்னாலஜிஸ் - AMB 6, South Phase, அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருவள்ளூர் High Road, அம்பத்தூர், சென்னை.
* ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் அல்லது கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி முடித்தவர்கள் (முன்னுரிமை) அல்லது 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் முடித்தவர்கள், தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* விண்ணப்பதாரருக்கு ஆங்கிலம் நன்றாக எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
* Night Shift மற்றும் எந்த ஷிப்டிலும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
இண்டர்வியூவில் தேர்வான உடன் சம்பளம் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
6-ம்தேதிக்கான வேலைக்கான தகுதி, இண்டர்வியூ நடக்கும் முறை:
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஜாவா ஏடபிள்யூஎஸ் டெவலப்பர் (Java AWS Developer) பணிக்கு வரும் 6-ம்தேதி ஆன்லைனில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூவில் தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அலுவலகங்களில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
தகுதிகள் :
ஜாவா 8+, ஸ்பிரிங் புட் (Spring Boot), RESTful APIs பற்றி நன்கு தெரிந்தவர்கள் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் AWS Services (Lambda, S3, DynamoDB, EC2 etc), Docker, Kubernetes, ECS, DevOps பிராக்டீசஸ் மற்றும் CI/CD பைப்லைன்ஸ், SQL/NoSQL Databases போன்ற பிரிவுகளில் நல்ல அனுபவம் உள்ளவர்களும், குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டர்வியூ நடைபெறும் முறை :
இந்த பணிக்கான இண்டர்வியூ ஆன்லைன் மூலமாக வரும் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் எச்சிஎல் நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் செய்து செப்டம்பர் 6ம் தேதி நடக்கும் ஆன்லைன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.