
நம் நாட்டில் செயல்படும் ஐடி நிறுவனங்களில் மிகவும் பிரபலமான ஒன்று எச்சிஎல் டெக்னாலஜிஸ்(HCL Technologies). இந்தியாவை தலைமையிடமாக கொண்டு 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள இந்த நிறுவனத்தில் 223,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர். சமீபகாலமாக இந்த நிறுவனம் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் வேலை தேடும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில் Voice Process பணிக்கு இன்றும் (செப்டம்பர் 29), நாளையும் (செப்டம்பர் 30) இண்டர்வியூ நடைபெற உள்ளது என்றும் டிகிரி முடித்தவர்களும், அரியர்ஸ் இருப்பவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
வேலை குறித்த முழு விவரம்:
பணி - Voice Process (Banking Domain)
கல்வித்தகுதி - எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் முடித்தவர்கள் அல்லது டிகிரி படித்தவர்கள் மற்றும் அரியர்ஸ் இருப்பவர்களும், கடைசி செமஸ்டர் ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்களும் நேர்முகத் தேர்விற்கு வரலாம்.
இதர தகுதிகள் - ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். Interpersonal Skills இருக்க வேண்டும். Inbound மற்றும் Outbound கால்ஸில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
வேலை நாட்கள் - வாரத்தில் 5 நாட்கள் வேலை. சனி, ஞாயிறு விடுமுறை.
இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை என்றும் எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் குறிப்பாக நைட் ஷிப்ட்டுக்கு பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என்றும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் இருந்து பிக்அப் மற்றும் டிராப்புக்கு Cab வசதி உண்டு. இந்த பணிக்கான நேர்முகத்தேர்வு இன்றும் (செப்டம்பர் 29), நாளையும் (செப்டம்பர் 30) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்
HCL Technologies - AMB 6,
NO- 8, South Phase,
Ambattur Industrial Estate,
Thiruvallur High Road,
Ambattur, Chennai
LandMark. Near Sulekha Property.
என்ற முகவரிக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும். நேர்முகத் தேர்விற்கு செல்பவர் டிகிரி சான்றிதழ் மற்றும் மற்ற தகுதி சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும்.